எந்த வங்கி எவ்வளவு வட்டி தருகிறது? 9.60% FD வட்டி தரும் வங்கி எது தெரியுமா?
சிறிய வங்கி, பெரிய வருமானம் கொடுக்கும் வங்கிகளில் பிரபலமான பெரிய வங்கிகள், தனியார் வங்கிகள் இடம் பெறவில்லை. நிலையான வைப்புத்தொகைக்குக் 9.60% வரை வட்டி தரும் வங்கிகள், முதலீட்டை பாதுகாப்பதோடு அதிக வட்டியும் தருவதால் மக்கள் சிறு நிதி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்ய விரும்புகின்றனர்
6, 7 அல்லது 8 சதவிகித வட்டிக்கு பதிலாக 9.6 சதவிகிதம் வரை வட்டி விகிதங்கள் கொடுக்கும் NBFCகளின் பட்டியலில் முதலில் இடம் பெறும் வங்கி எது தெரியுமா?
சூர்யோதய் சிறு நிதி வங்கி: FD இல் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் சூர்யோதாய் சிறு நிதி கொடுக்கும் வட்டி விகிதத்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள். Suryoday Small Finance Bank Limited, எஃப்டிக்கு அதிக வட்டி கொடுக்கிறது. 9.60 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு FD செய்தால், மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதம் முதல் 9.60 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank Limited) 1001 நாட்களுக்கான FDக்கு பொதுக் குடிமக்களுக்கு 9 சதவீத வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 9.50 சதவீத வட்டியையும் வழங்குகிறது. சாதாரண மக்களுடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்
ஃபின்கேர் சிறு நிதி வங்கி: இதேபோல், ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில், 1000 நாட்களுக்கு FDக்கு 8.51 சதவீத வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்கள் இந்த வங்கியில் FD செய்தால் அவர்களுக்கு 9.11 சதவீத வட்டி கிடைக்கும்.
ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி: இந்த சிறு நிதி வங்கியில், 888 நாட்களுக்கான FDக்கு 8.50 சதவீத வட்டியைப் பெறுகிறார்கள், மூத்த குடிமக்கள் அதே காலத்திற்கு 9 சதவீதம் வரை வட்டி பெறுகிறார்கள்.
ESAF சிறு நிதி வங்கி: ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு 8.50 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 9 சதவீத வட்டியும் கிடைக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை