Gold அரண்மனை, 7000 சொகுசு கார்கள், தங்க விமானம் யாரிடம் இருக்கிறது தெரியுமா?

Thu, 11 Feb 2021-6:27 am,

புருனேயைச் சேர்ந்த சுல்தான் ஹசனல் போல்கியா உலகின் பணக்கார சுல்தான்களில் ஒருவர். 1980 ஆம் ஆண்டு வரை அவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். ஹசனல் போல்கியாவுக்கு 14,700 கோடி ரூபாக்கு மேல் சொத்துக்கள் இருக்கிறது. அவரது வருவாயின் மிகப்பெரிய ஆதாரம் எண்ணெய் இருப்பு மற்றும் இயற்கை எரிவாயு ஆகும்.

ஹசனல் போல்கியாவின் இஸ்தானா நூருல் இமான் அரண்மனையின் மதிப்பு என்ன தெரியுமா? 2550 கோடி ரூபாய்க்கும் அதிகமாம்… இந்த அரண்மனையில் 1700 க்கும் மேற்பட்ட அறைகள், 257 குளியலறைகள் மற்றும் ஐந்து நீச்சல் குளங்கள் உள்ளன. வாகனங்கள் நிறுத்துவதற்கு 110 கேரேஜ்கள், 200 குதிரைகளுக்காக கட்டப்பட்டிருக்கும் கொட்டடிகளுக்கு ஏ.சி வசதி செய்யப்பட்டிருக்கிறது. தொழுவங்கள் உள்ளன.

சுல்தான் ஹசனல் போல்கியா வசிக்கும் அரண்மனை தங்கத்தால் ஆனது. இஸ்தானா நூருல் இமான் அரண்மனை (Istana Nurul Eman Palace) என்ற அந்த பொன்மாளிகை 1984 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, இது 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையின் குவிமாடங்களில் 22 காரட் தங்கம் பதிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் ஹசனல் போல்கியா 7000 சொகுசு கார்களை வைத்திருக்கிறார், அவற்றின் மதிப்பு சுமார் 341 பில்லியன் ரூபாய். சுல்தானிடம் 600 ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் 300 ஃபெராரிஸ் ரக கார்கள் இருக்கிறது.

சுல்தான் தங்கமுலாம் பூசப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்கிறார். சுல்தான் ஹசனல் போல்கியாவிடம் ஆடம்பர வசதிகளுடன் கூடிய பல தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. இவருக்கு போயிங் 747-400, போயிங் 767-200 மற்றும் ஏர்பஸ் ஏ 340-200 ஜெட் விமானங்கள் உள்ளன. போயிங் 747-400 ஜெட் தங்கத்தால் பூசப்பட்டிருக்கிறது, இந்த விமானத்தில் அரண்மனையில் இருப்பதுபோன்ற வரவேற்பறை, படுக்கையறை உட்பட பல வசதிகளும் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link