உடல் சூட்டைத் தணிக்கும் இளநீரை யார் எப்போது குடித்தால் முழு பயனும் கிடைக்கும்?
இளநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கோடைக்காலத்தில் இளநீரை எந்த நேரத்திலும் குடிக்கலாம். ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியான நேரத்தில் இளநீரை பருகுவது நல்லது.
இளநீரில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் இது உடலை ஹைட்ரேட் செய்வதோடு புத்துணர்ச்சியையும் தருகிறது.
சிவப்பு நிறத் தேங்காயிலிருந்து பெறப்படும் செவ்விளநீர், வழக்கமான பச்சை நிற மட்டையுடன் இருக்கும் இளநீரில் இருக்கும் அதே பண்புகளைக் கொண்டுள்ளது.
இளநீரில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருந்தாலும், இளநீர் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வைத் தருகிறது. நாளொன்று 3 முதல் 4 இளநீர் அருந்தலாம். அதற்கு மேல் அருந்துவது தேவையில்லை
காலையில் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது நல்லது. ஏனெனில் இளநீரில் உள்ள லாரிக் அமிலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கர்ப்பிணி பெண்கள், காலையில் இளநீர் பருகலாம். உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவும் இளநீர், கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் உணர்வை கட்டுப்படுத்தும்
உணவுக்கு முன் இளநீரைக் குடிப்பதால், உணவு உண்ணும் அளவு குறையும். இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தடுத்து, உடலில் கலோரிகள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்
இரவில் தூங்கும் முன்னர் இளநீர் குடிப்பது உடலில் இருக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்றவும், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவும்
இளநீரில் கலோரிகள் குறைவாக இருப்பதால், செரிமானத்திற்கும் வயிற்றுக்கும் நல்லது. இதில் பயோ-ஆக்டிவ் என்சைம்கள் நிறைந்திருப்பதால், செரிமானத்தை சீராக ஆக்குகிறது
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை