Sun Tan Removal: சுட்டெரிக்கும் வெயில் சருமத்தை பதம் பார்த்துவிட்டதா? பளபளப்பாக சுலப வழி!
கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகள் போலவே, சன் டேன் ஆவதால் ஏற்படும் பிரச்சனை அழகை குறைத்துவிடும், நீண்டகால அடிப்படையில் சருமம் பாதிக்கப்படும் என்பதால் வெயில் காலத்தில் சில வீட்டு வைத்தியங்கள் சருமத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படுவது வழக்கம்
வெயிலின் தாக்கத்தால் சருமம் பொலிவிழந்து போவதை சரி செய்ய, நமது வீட்டின் சமையலறையில் பயன்படுத்தப்படும் சில பொருட்களே போதுமானது. இதற்கு அதிக செலவும் ஆவதில்லை. சருமத்தின் பொலிவை மீட்டெடுக்கும் சில கிச்சன் கில்லாடிகளைத் தெரிந்துக் கொள்வோம்
உருளைக்கிழங்கு தோலை சீராக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் சருமத்தின் நிறத்த்தில் ஏற்பட்ட பாதிப்பை அழிக்க உதவுகிறது. உருளைக்கிழங்கு சாற்றை ஒரு துணியில் தொட்டு முகத்தில் தடவவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவவும். இதனால் உங்கள் சருமம் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள மஞ்சள், தோலில் உள்ள மாசு மரு, பொலிவற்றத் தன்மை ஆகியவற்றை நீக்க உதவுகிறது. 4 ஸ்பூன் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளை நன்கு கலக்கவும். இதனை உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும். இது உங்கள் சருமத்தை மேம்படுத்தும்.
இறந்த சரும செல்களை அகற்றி சருமத்தை பொலிவாக்குகிறது கடலைமாவு. சருமத்தை பளபளப்பாக, கடலை மாவுடன் பால், தயிர், ரோஸ் வாட்டர் போன்றவற்றை கலந்து தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்
கற்றாழை தோல் தொடர்பான அனைத்து வகையான கோளாறுகளையும் குணப்படுத்த மிகவும் பயனுள்ளது. அதன் பண்புகள் சருமத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பளபளப்பாகவும் சுத்தமாகவும் வைக்கின்றன. சன் டேன் ஆனால், கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் தடவ வேண்டும். இரவு தூங்கும் முன் தடவி காலையில் கழுவி விடவும்.
முகத்தில் வெள்ளரிக்காயை பூசி சிறிது நேரம் கழித்து கடலை மாவு கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், சன் டேனிங் போய்விடும்
தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புள்ளிகள் மற்றும் மங்குகளை நீக்கும். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். தக்காளி சாற்றை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வைத்துவிட்டு, பிறகு நன்றாக கழுவினால், பொலிவான முகம் கிடைக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலன், ஆரோக்கியம், அழகு தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.