அந்தரத்தில் நடப்பது போன்ற உணர்வைத் தரும் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம்
இந்த கண்ணாடிப் பாலம் வியட்நாமில் உள்ளது. காடுகளின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் பெயர் Bach Long பாலம், ஆங்கிலத்தில் 'White Dragon bridge' என்று பொருள். உலகிலேயே மிக நீளமான கண்ணாடிப் பாலம் என்று இந்தப் பாலத்தைக் கட்டியவர்கள் கூறினாலும், கின்னஸ் உலக சாதனை இந்த கூற்றை உறுதிப்படுத்தவில்லை. இது 632 மீ (2,073 அடி) நீளம் கொண்டது. தரையில் இருந்து 150 மீ (492 அடி) உயரத்தில் அமைந்து உள்ளது.
இந்த பாலத்தின் அமைப்பு துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கோபுரத்தின் நான்கில் மூன்று பங்கு உயரம் கொண்டது. இந்த பாலம் 500 பேரின் எடையை எளிதில் தாங்கும். பாலத்தின் தளம் பிரெஞ்சில் தயாரிக்கப்பட்ட மென்மையான கண்ணாடியால் ஆனது.
கண்ணாடித் தளம் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் பாலத்தைச் சுற்றியுள்ள அழகை கண்டு ரசிக்கலாம். இருப்பினும், அதன் மீது நடப்பவர்களுக்கு கீழே பார்க்க துணிவு வேண்டும்.
கடந்த 2-3 ஆண்டுகளாக, கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, வெளிநாட்டு பயணிகள் இங்கு வர தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.