IPL 2021: ஐபிஎல்லில் அதிகம் சம்பாதித்த வீரர் இவர் தான்!!!
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைத்தது. இதுவரை மொத்தம் ஐபிஎல்லில் இருந்து 150 கோடி ரூபாய் சம்பாதித்த தோனி, ஐபிஎல் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஐ.பி.எல்லில் இருந்து அதிக பணம் சம்பாதிக்கும் வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல் லீக்கில் மொத்தம் 146.6 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் ஷர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி. ஐ.பி.எல். 2008 ஆம் ஆண்டில், ஐபிஎல் தொடங்கியபோது விராட் கோலிக்கு ஊதியம் குறைவுதான். இதனால் தான் இப்போது அதிக சம்பளம் வாங்கும் வீரராக இருந்தபோதிலும் விராட் ஐபிஎல்லில் ஈட்டிய வருமானத்தின் அடிப்ப்டையிலான பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஐபிஎல்லில் விராட் கோலியின் மொத்த வருவாய்143.2 கோடி ரூபாய் ஆகும்,
ஐபிஎல் போட்டிகளில் ஏலத்தில் எடுப்பதால் வீரர்களின் சம்பளம் ஏலத்தொகைக்கு ஏற்றாற் போல ஆண்டுக்கு ஆண்டு மாறிக் கொண்டே இருக்கும்
Times Now வழங்கிய கிரிக்கெட் வீரர்களின் சம்பள புள்ளிவிவரங்கள் தொடர்பான தகவல்களின் ஆதாரத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது..