குக் வித் கோமாளி: மணிமேகலை விலகியது ஏன்?
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்தார் மணிமேகலை
புகழ், சிவாங்கியுடன் இணைந்து முதல் சீசனில் இருந்து கோமாளியாக இருக்கிறார்.
அவரின் காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகியிருக்கிறார் மணிமேகலை.
அவர் ஏன் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.