ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?
நாம் ஆண்டுதோறும் ஆயுதப்பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை இரண்டும் எதற்காகக் கொண்டாடுகிறோம் எனத் தெரியாமலேயே இதை கொண்டாடி வருகிறோம்.
ஆயுதப்பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை இரண்டும் தமிழகத்திலும், கேரளாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற மாநிலங்களும் இந்த பண்டிகையைப் பின்பற்றி வருகின்றன.
வருடம்தோறும் ஆயுதப்பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடுவது நாம் பயன்படுத்தும் பொருட்கள் ஆயுதமாக நமக்கு உதவுவதால் அவற்றை வழிபடுவதற்காக நாளாக இது அமைந்துள்ளது.
நாம் பயன்படுத்தும் சிறு பொருட்களிலிருந்து பெரிய பொருட்கள் வரை நமக்கு உதவிசெய்கிறது. உயிரற்றப் பொருட்களாக இருந்தாலும் நமக்கு பயன்படுகிறது.
ஆயுதப்பூஜை மற்றும் சரஸ்வதிப்பூஜை இரண்டும் லட்சுமி, சரஸ்வதியை வழிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் சரஸ்வதிப்பூஜை அனைவருக்கும் அறிவு, ஒழுக்கம் வளர கொண்டாடப்படுகிறது.
ஆயுதங்கள் பயன்படுத்தும் அனைத்து தொழில் துறையிலும் ஆயுதப்பூஜை கொண்டாடப்படுகிறது .சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியைத் தெய்வமாக வழிப்பட்டு அறிவு, ஒழுக்கம், படிப்பு போன்றவற்றிற்காக வழிப்பட்டு வருகின்றனர்.
வணிகதுறை முதல் சிறுத் தொழில் வரை ஆயுதப்பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதிப்பூஜையன்று பள்ளிகள் மற்றும் வீட்டில் பிள்ளைகளின் படிப்பிற்காக வழிபடுகின்றனர்.
ஆண்டுதோறும் ஆயுதப்பூஜை மற்றும் சரஸ்வதிப் பூஜை இரண்டும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ராணுவ வீரர்கள், காவல் துறை, கப்பல் துறை போன்ற துறையில் ஆயுதங்களைத் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர்.