10 ரூபாய் நாணயம், 100 ரூபாய் நோட்டு செல்லுமா? செல்லாத? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

Wed, 11 Sep 2024-5:06 pm,

₹10 நாணயம் செல்லுமா செல்லாத.. எந்த நாணயம் உண்மையானது? வாருங்கள் பார்ப்போம்.

இந்தியாவில் ₹10 நாணயம் பல்வேறு வடிவமைப்புகளில் புழக்கத்தில் உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ₹10 நாணயத்தில் 14 வெவ்வேறு வடிவமைப்புகள் உள்ளன. 

இவற்றில் 10 வரி வடிவமைப்பு கொண்ட நாணயங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், அதே சமயம் 15 வரி வடிவமைப்பு கொண்டவை போலியானவை என்றும் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதன் காரணமாக ₹10 ரூபாய் நாணயங்களை மக்கள் ஏற்க தயங்குகின்றனர். 

 

சில குறியீட்டை கொண்ட நாணயங்கள் மட்டுமே உண்மையானவை என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் நாணயத்தின் வடிவமைப்பு உண்மையானதாக இருக்க 10 வரிகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ள எல்லா ₹10 நாணயங்களும் இந்திய அரசின் அதிகாரத்தின் கீழ் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. 14 வகைகளில் எந்த வடிவமைப்பை கொண்டிருந்தாலும் அனைத்து நாணயங்கள் ஒரே மதிப்பை கொண்டுள்ளன

ஒவ்வொரு வடிவமைப்பிலும் அனைத்து ₹10 நாணயங்களும் சட்டபூர்வமானவை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது.

இதனால் நாணயத்தை ஏற்க மறுப்பது பொருத்தமற்றது மட்டுமல்லாமல், அது சட்ட விரோதமானது என்பதும் உறுதி செய்யப்படுகிறது

இந்த நாணயங்களை பரிவர்த்தனைகளுக்கு ஏற்க மறுக்கும் தனி நபர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது. 

ஆனால் ₹100 நோட்டு செல்லுமா என்பது குறித்து ஆர்பிஐ விளக்கம் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை ₹10 நாணயங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 1440 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி பொதுமக்களை அறிவுறுத்தி இருக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link