தலைமுடி முதல் பாதம் வரை, குளிர் கால பராமரிப்பு முறைகள்
கால்களில் பித்தவெடிப்பு உள்ளவர்கள் மெடிக்கல்களில் கிடைக்கும் லாவண்டர் ஆயிலை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன்னர் பஞ்சில் நனைத்து பாதம் முழுவதும் அப்ளை செய்து மறுநாள் காலையில் இதமாகத் தேய்த்துக் கழுவ பித்தவெடிப்பு நீங்கும்.
குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படுவதால் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும். எனவே டீ - ட்ரீ ஆயில் 5 சொட்டுகள் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து ஷாம்பூ பயன்பாட்டுக்குப் பின் அதைக் கொண்டு தலையை அலச வறட்சியால் ஏற்படும் பொடுகுத் தொல்லை நீங்கும்.
இரவு உணவுக்கு பின் ஒரு டம்ளர் சுடுநீரில் சிறிதளவு தேன், 6,7 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள், குளிர் காலத்தில் காலையில் வரும் வறட்டு இருமல், சளி குணமாகும்.
உதடு வெடிப்பிற்கான எண்ணெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவ லம். அதனால், வெடிப்பு குணமாவதுடன், உதட்டுக்கு கூடுதல் மென்மை கிடைக்கும்.
ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படையும்.