குளிர்காலத்தில் வரும் நிமோனியா.. அறிகுறிகளும் முன்னெச்சரிக்கையும்...!
நிமோனியா என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு நோயாகும். குளிர்காலத்தில் இதன் ஆபத்து அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில், காற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் குளிர் இருக்கும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி மற்றும் பரவலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது.
குளிர்ந்த காலநிலையில், சுவாச பாதை வீக்கமடைந்து தொற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது. காய்ச்சல், குளிர் மற்றும் வீட்டுச் சூழலும் இந்த நோயை ஏற்படுத்துகின்றன. அடிப்படையில், நிமோனியா என்பது நுரையீரலை பாதிக்கும் சுவாச அமைப்பு தொற்று ஆகும். இந்த தொற்று நுரையீரலின் காற்று செல்களில் இருக்கும்.
சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் நுழைந்து உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தொற்று இருப்பவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் நிமோனியாவை ஏற்படுத்தும். நிமோனியாவின் தீவிரம் லேசானது முதல் உயிருக்கு ஆபத்தானது வரை இருக்கலாம்.
இந்த தொற்று குழந்தைகள் முதல் முதியவர்களை யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக ஆபத்து இருக்கிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
குளிர்காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது மற்றும் தொற்றுநோயை எதிர்கொள்ளும் திறன் குறைகிறது. அதேநேரத்தில் இந்த காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் குளிர் இருக்கும், இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி மற்றும் பரவலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதால் குளிர்காலத்தில் நிமோனியா வைரஸ் அதிகம் பரவுகிறது.
நிமோனியா அறிகுறிகள் : நிமோனியா, அதிக காய்ச்சல் மற்றும் குளிர்ச்சி, சளியுடன் இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சோர்வு மற்றும் பலவீனம், வாந்தி அல்லது குமட்டல், வியர்வை மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. அதிக காய்ச்சல், வியர்வை, மஞ்சள் சளி இருமல், பசியின்மையும் இந்த நோயின் அறிகுறியாகும்.
நிமோனியாவை எவ்வாறு தடுப்பது? : நிமோனியாவைத் தடுக்க, முதலில் உணவைக் கவனித்துக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். இதன் மூலம் தொற்று நோயில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சுகளை உட்கொள்ளுங்கள். வைட்டமின் சி உடலுக்கு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. முழு தானியங்களை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நோயிலிருந்து விரைவில் குணமடைய, வெந்நீர் அருந்தவும், சூடான சூப் குடிக்கவும். தேன் உட்கொள்ளவும்.
இந்த நோயைத் தடுக்க வேண்டுமானால், போதுமான அளவு தூங்குங்கள், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. உடலில் காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக சிகிச்சை அளித்து மருத்துவரை அணுகவும்.