பார்ப்போரை கவர்ந்திழுக்க வேண்டுமா... பெண்கள் பின்பற்ற வேண்டிய 5 டிப்ஸ்!
பெண்கள் மீது சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் ஆகியவற்றை வெற்றிகரமாக தாண்ட தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் ஆகும்.
அந்த வகையில், தோற்றத்தில் கவனம் எடுத்து இந்த 5 விஷயங்களை செய்யும்போது உங்களின் தன்னம்பிக்கை பல மடங்கு உயரும். தன்னம்பிக்கை வந்துவிட்டால் நீங்கள் நினைக்கும் அத்தனையும் கைக்கூடி வரும். அந்த வகையில், பெண்கள் பின்பற்ற வேண்டிய அந்த 5 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
தலைமுடியில் கவனம்: தலைமுடிக்கு ஷாம்பூ, கண்டிஷனர் போட்டு உங்களின் தலைமுடியின் தன்மைக்கு ஏற்றவாரு சீராக வைத்துக்கொள்ளவும். அடிக்கடி முடியை சுத்தப்படுத்துவதும், ஆழமாக கண்டிஷனிங் செய்வதும் தலைமுடி எப்போதும் ஈரப்பதத்துடனும், பளபளப்புடனும் இருக்கும்.
மற்ற பாகங்களின் முடிகளையும் சீர்படுத்தவும்: முகப்பொழிவை அதிகரிக்க கண்ணிமையை சீராக வைத்துக்கொள்வதும் முக்கியம். உடலில் மற்ற பாகங்களில் உள்ள முடிகளை பராமரிப்பதும் உங்கள் முடிவுதான். வேக்ஸிங், ஷேவிங் மூலம் கால், கைகளில் உள்ள முடிகளை பக்குவமாக அகற்றலாம். அதேபோல், நகத்தை முறையாக வெட்டி, பாலிஷாக வைத்துக்கொள்வதும் முக்கியம்.
பல்லையும் கவனியுங்கள்: பல்லை சுத்தமாக வைத்துக்கொள்ள தினமும் 2 முறை பல் துலக்கவும். சாப்பிட்ட உடன் வாயை கொப்பழிக்கவும். இது வாய் துர்நாற்றத்தை தடுக்கும். சுகர் இல்லாத பப்பிள் கம் உள்ளிட்டவற்றை விரைவான பலன்களுக்கு பயன்படுத்தலாம்.
சரும பாதுகாப்பு: வாரத்திற்கு ஒருநாள் அதாவது சனி அல்லது ஞாயிறு நீங்கள் ரிலாக்ஸாக இருக்கும் நேரத்தில் சருமத்திற்காக நீங்கள் செலவிடலாம். இதுகுறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று அதன் பின் மேற்கொள்ள வேண்டும்.
வியர்வை: அதேபோல், உடற்பயிற்சி உள்ளிட்ட வேலைகளுக்கு பின் உடலில் அதிக வியர்வை ஏற்பட்டால் உங்களின் ஆடைகளை மாற்றிக்கொள்வதும் நல்லது. அடிக்க குளிப்பதும், வெளியில் செல்லும் டியோடிரன்ட் உள்ளிட்டவை பயன்படுத்தி வியர்வை நாற்றத்தை முறியடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.