விற்பனைக்கு உள்ளது உலகின் மிக அழுக்கான வீடு: தைரியம் இருந்தா படங்களைப் பாருங்க

Sat, 06 Nov 2021-4:59 pm,

பல ஆண்டுகளாக காலியாக உள்ள இந்த வீடு, தற்போது விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டை சுத்தம் செய்யாமல் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் ஆச்சரியமான விஷயமாக உள்ளது. அதாவது, இந்த வீட்டை யார் வாங்கினாலும், 13 வருடங்களாக குவிந்துள்ள குப்பைகளும் அவர்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

தற்போது இந்த வீட்டை வீடு, மனை விற்கும் ஒரு நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இந்த வீடு முதலில் ஒரு வயதான தம்பதியினருக்கும் அவர்களின் மகனுக்கும் சொந்தமானதாக இருந்தது. வீட்டின் நிலைமையைப் பார்க்கும்போது வயதான பெற்றோர் இருவரும் இறந்துவிட்டிருக்கலாம் என்றும், வேறு இடத்தில் வசித்த மகனால் இந்த வீட்டை பராமரிக்க முடியவில்லை என்றும் ஊகிக்கப்படுகிறது. டிசம்பர் 2008 -ன் செய்தித்தாள் ஒன்று படுக்கையறையின் தரையில் இருப்பது தெரிகிறது. பல ஆண்டுகளாக வீடு பழுதடைந்து கிடப்பதையே இது காட்டுகிறது.

இந்த வீட்டின் வெளிப்புற படங்களை பார்க்கும் போது, ​​வீட்டின் வெளியே அதிக அளவில் புல் வளர்ந்து இருப்பது தெரிகிறது. இந்த புல் கூரை வரை எட்டியுள்ளது. பல ஆண்டுகளாக இது வெட்டப்படவில்லை.

 

நகரத்தின் குப்பை முழுவதும் இங்குதான் இருப்பது போல, வீட்டின் உள்ளே படிக்கட்டுகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இங்கு கடந்த 13 ஆண்டுகளாக குப்பைகள் குவிந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

சமையலறையின் படங்களைப் பார்க்கும்போது, நீண்ட நாட்களாக இங்கு யாரும் வரவில்லை என்பது தெரிகிறது. அங்கு 13 ஆண்டுகள் பழமையான அழுக்கு பாத்திரங்கள் கிடக்கின்றன. அழுக்கான சிங்க் மற்றும் அடுப்பு மீது வைக்கப்பட்டுள்ள உணவும் மிகவும் பழையதாக இருக்கிறது.

இந்த வீட்டின் கழிப்பறையின் படங்களையும் நீங்கள் பார்த்திருந்தால், புகைப்படத்தைப் பார்த்தவுடன் வாந்தி எடுக்க வாய்ப்புள்ளது. கழிப்பறை இருக்கையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அசல் நிறத்தை அடையாளம் காண்பது கூட கடினமாக உள்ளது.

வீட்டின் மாஸ்டர் பெட்ரூமின் படமும் உள்ளது. இந்த வீட்டில் முதலில் இருந்தவர்கள் ஏன் இவ்வளவு குப்பைகளை படுக்கையில் வீசினார்கள் என்பதே புரியாமல் உள்ளது. ஆனால், இந்த நிலையிலும் இந்த வீடு சுத்தம் செய்யப்படாமல் விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link