Solar Heated Tent: உலகின் முதல் சூரிய வெப்ப கூடாரம் இந்தியாவின் மிக உயரமான இடத்தில்…

Sun, 21 Feb 2021-8:13 pm,

சோலார் டெண்ட் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வாங்சுக். இவர் தான் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்காக ராணுவ கூடாரத்தை கட்டியுள்ளார். கூடாரத்தில் 10 ஜவான்கள் தங்க முடியும் கூடாரத்தின் எடை 30 கிலோவிற்கும் குறைவாக உள்ளது, மேலும் இது ஒரு நாளுக்குள் மிக விரைவாகவும், முழுமையாக அமைத்துவிடலாம்.

கூடாரம் முழுவதுமாக சீல் செய்யப்பட்டிருக்கும் என்றும், மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் போன்ற உறைய வைக்கும் குளிரிலும் கூடாரத்தின் உட்புற வெப்பநிலையை இயல்பாக வைத்திருக்கும் என்று வாங்சுக் கூறுகிறார். அதாவது, -14 டிகிரி வெப்பம் வெளியில் நிலவினாலும், கூடாரத்தின் உட்புறத்தில் எந்த செயற்கை வெப்பமும் தேவையில்லாமல் வெப்பநிலை பராமரிக்கப்படும்.

இது பகல் வேளையில் சூரியனில் இருந்து பெறும் வெப்பத்தை கிரகித்துக் கொண்டு 12 முதல் 14 மணி நேரம் வரை அதாவது இரவு முழுவதும் கூடாரத்தை சூடாக வைத்திருக்கும். உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும் இந்தக் கூடாரம் நான்கு வாரங்களில் செய்யப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு ஏற்படுத்தாத பொருட்கள் கூடாரத்தை கட்ட பயன்படுத்தப்படுகின்றன. கூடாரத்தை உருவாக்க தேவையான பொருள் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யலாம்.

சோனம் வாங்சுக் ஒரு பொறியியலாளர் கல்வி சீர்திருத்தவாதி மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். ‘மூன்று இடியட்ஸ்’ திரைப்படத்தில் அமீர்கானின் கதாபாத்திரத்திற்கு உத்வேகமாக இருந்தவர் வாங்சுக் என்பது சிறப்புத் தகவல். இதற்கு முன்னர் அதிக உயரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்திற்காக சூரிய வெப்ப மண் குடிசையை வடிவமைத்துள்ளார். பிராந்தியத்தில் கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்திய லடாக் மாணவர் அவர்.  Students Educational and Cultural Movement of Ladakh (SECMOL) என்ற நிறுவனத்தையும் அவர் நிறுவியுள்ளார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link