ஓய்விற்கு பிறகும் ஆரம்பட வாழ்க்கை! தி கிரேட் காளியின் நிகர சொத்து மதிப்பு!

Sun, 08 Sep 2024-3:00 pm,

தி கிரேட் காளிக்கு அவரது உயரம் ஒரு தனித்துவத்தை கொடுத்தது. இதனால் உலகெங்கிலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன் மூலம் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்தார்.

 

WWE தாண்டி இந்தியாவில் உள்ள இளம் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறார். தற்போது கிரேட் காளியின் நிகர மதிப்பு $8 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

WWE போட்டியில் உலக ஹெவிவெயிட் சாம்பியன் மற்றும் முக்கிய WWE போட்டிகளில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளார். அவரது சண்டைகள் அவரது பாரம்பரியத்தை உறுதிப்படுத்தியது. 

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காளி WWE போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவரது கடந்த கால சாதனைகள் முறியடிக்கப்படவில்லை. 

 

பஞ்சாப்பில் மிகப்பெரிய தோட்டத்திற்கு நடுவே பிரமாண்ட வீட்டில் தற்போது வசிக்கிறார் காளி. சிமெண்ட் மற்றும் முறுக்கு கம்பிகள் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

 

மேலும் பல்வேறு வணிக ஒப்பந்தங்கள், முதலீடுகள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா போன்றவற்றின் மூலம் WWE ஓய்விற்கு பிறகும் சம்பாதித்து வருகிறார் தி கிரேட் காளி.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link