புடவையிலும் கிளாமர் காட்டும் யாஷிகா! வைரலாகும் புகைப்படங்கள்!

Thu, 21 Dec 2023-7:54 pm,

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர், யாஷிகா ஆனந்த். இவருக்கு திரையுலக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது, இன்ஸ்டாகிராம் தளம்தான். இதில் மாடலாக இருந்த இவருக்கு எளிதில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. 

17 வயதில் திரையுலகிற்குள் வந்த இவர், முதன் முதலாக நடித்த படம் ஜீவா ஹீரோவாக நடித்த ‘கவலை வேண்டாம்’ திரைப்படம்தான். இதில், படத்தின் ஆரம்பத்திலேயே சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். 

யாஷிகாவிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு கொடுத்த படம், துருவங்கள் 16. இந்த படம் 2016ஆம் ஆண்டு வெளியானது. 

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பிறகு யாஷிகாவை ரசிகர்கள் கவர்ச்சி நடிகையாக பார்க்க தொடங்கினர். இதையடுத்து, அவருக்கு வரும் வாய்ப்புகளும் அதே போன்ற கவர்ச்சி கதாப்பாத்திரங்களாக இருந்தன. 

யாஷிகாவிற்கு பிக்பாஸ் சீசன் இரண்டாவது சீசனில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் நன்றாகவே பிடித்துக்கொண்டார். 

யாஷிகா, அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவை அவ்வப்போது வைரலாவதுண்டு. 

பிங்க் நிற புடவையில் அவர் கிளாமர் காட்டி எடுத்துள்ள புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link