இந்திய அணி 2023ஆம் ஆண்டில் படைத்த சாதனைகள் - அதிக சிக்ஸர்கள் முதல் அதிக சதங்கள் வரை...!
இந்திய அணி இந்தாண்டு மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 289 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இதன்மூலம், ஓராண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அணியாக இந்தியா மாறியுள்ளது.
ஓராண்டில் அதிக ஓடிஐ வெற்றிகளை குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்தாண்டு 35 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளை வென்றது. ஆனால், 2003ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி 35 போட்டிகளில் விளையாடி 30 போட்டிகளை வென்றது.
இந்தாண்டில் இந்தியா மொத்தம் 9 முறை ஓடிஐ போட்டிகளில் 350 ரன்களை தாண்டியுள்ளது. இதற்கு முன், 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்து 7 முறை 350 ரன்களை தாண்டியதுதான் சாதனையாக இருந்தது.
ஓராண்டில் அணியாக அதிக சதத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. 2019ஆம் ஆண்டும், இந்தாண்டும் தலா 19 ஓடிஐ சதங்களை இந்தியா பதிவு செய்துள்ளது.
இந்தாண்டு ஓடிஐ அரங்கில் அதிக ரன்களை குவித்தது இந்திய வீரர் சுப்மான் கில். அவர் 1584 ரன்களை குவித்துள்ளார்.
இந்தாண்டு ஓடிஐ அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய வீரர் குல்தீப் யாதவ். அவர் 49 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஓராண்டில் ஓடிஐ அரங்கில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இந்தாண்டில் 250 சிக்ஸர்களை அடித்து இந்த சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.