அம்பானி வீட்டு பெண்களின் டாப் 5 ஆடைகள் - 2024ஆம் ஆண்டின் வின்னர் யார் தெரியுமா?

Sat, 21 Dec 2024-4:26 pm,

2024ஆம் ஆண்டில் பல நிகழ்வுகள், சம்பவங்கள், விளையாட்டு போட்டிகள் உங்களின் நினைவில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டில் நடந்த, ஒட்டுமொத்த இந்தியர்களால் மறக்கவே முடியாத ஒன்று என்றால் அது ஆனந்த் அம்பானியின் திருமணத்தை சொல்லலாம்.

 

 

கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பிரம்மாண்டமான முறையில் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் மணப்பெண் ராதிகா மெர்ச்சண்ட் மட்டுமின்றி அம்பானி குடும்பத்தினர்களான நிதா அம்பானி, இஷா அம்பானி, ஸ்லோகா மேத்தா உள்ளிட்டோரின் ஆடைகளும் பெரியளவில் கவனம் ஈர்த்தன. 

 

அந்த வகையில், ஆனந்த் அம்பானி திருமணத்தில் (Anant Ambani - Radhika Merchant Marriage) மட்டுமின்றி 2024ஆம் ஆண்டில் வெவ்வேறு தருணங்களில் அம்பானி குடும்பத்து பெண்கள் (Ambani Ladies) அணிந்த டாப் 5 சிறந்த ஆடைகளை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம். 

 

நமது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் கைத்தறி மூலம் செய்யப்பட்டதுதான், நிதா அம்பானியின் (Nita Ambani) இந்த தங்க பட்டுச் சேலை. இந்தியாவின் பாரம்பரியமான கைத்தறி முறைப்படி அதிகப் பொருட்சொலவில் நிதா அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்விற்காக இதை அணிந்திருந்தார். 

 

கடந்த மே மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற Met Gala என்ற கலை சார்ந்த நிகழ்வில் பங்கேற்றபோது, இஷா அம்பானி (Isha Piramal Ambani) அணிந்த பூ வேலைப்பாடுகளாலான இந்த புடவை தான் அனைவரையுயம் வாய் பிளக்க வைத்தது என்றால் அது மிகையில்லை. அதாவது இது புடவையும், கவுனும் இணைத்து செய்யப்பட்ட ஆடையாகும். உண்மையான பூக்களை வைத்தே அலங்கரிக்கப்பட்ட இந்த ஆடையை தயாரிக்க 10 ஆயிரம் மணிநேரம் எடுத்ததாம். 

 

அம்பானி குடும்பத்தின் மூத்த மருமகளான ஸ்லோகா மேத்தா (Shloka Meta), ஆனந்த் - ராதிகா திருமணத்தின் ஹல்தி நிகழ்வில் அணிந்திருந்த லெஹெங்கா அப்போதே பலரின் கண்களையும் கவர்ந்தது. 

 

அம்பானி வீட்டு இளைய மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் (Radhika Merchant) தனது திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் அணிந்திருந்த இந்த Dolce & Gabbana ஆடை பலரையும் கவர்ந்தது. தெய்வங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட மேலாடையுடன், தங்க நிற ஸ்கர்டையும் அணிந்திருந்தார். 

 

இஷா அம்பானிதான் மற்றவர்களை விட ஆனந்த் - ராதிகா திருமணத்தில் தனியாக தெரிந்தார்.  அந்த வகையில், இந்தாண்டில் அம்பானி வீட்டு பெண்களில் சிறந்த ஆடைகளை அணிந்தவர்களில் வின்னர் இஷா அம்பானிதான். உதாரணத்திற்கு, திருமணத்தின் சங்கீத் நிகழ்வுக்கு இஷா அம்பானி மூன்று உடைகளில் தோற்றமளித்தார். அந்த மூன்றில் இந்த மார்ட்ன் லெஹங்கா அனைவரின் கண்ணையும் பறித்தது எனலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link