மாதம் ₹42 போதும்; ஆயுள் முழுவதும் பென்ஷன் தரும் அடல் பென்ஷன் திட்டம்..!
இந்த திட்டத்தின் பெயர் அடல் பென்ஷன் திட்டம். இதில் குறிப்பிட்ட பணத்தை முதலீடி செய்தால், 60 வயதிற்கு பிறகு, ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். மத்திய அரசின் இந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கிறது.
இந்த திட்டத்தில், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு நபரும் சேர்ந்து கணக்கை தொடக்கலாம்.
APY, அடல் பென்ஷன் யோஜனா குறித்து கூறிய முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி, “ஒரு முதலீட்டாளர் தனது 18 வயதில் APY கணக்கைத் திறந்தால், APY ஓய்வூதியத்திற்கான அவரது மாத பிரீமியம் ₹1000 ஆக இருக்கும் என்றார்.
APY திட்டத்தில் ₹2,000 ஓய்வூதியத்திற்கான பிரீமியம் ₹84 ஆகும். ₹3,000 மாதந்திர பெண்ஷன் பெற ப்ரீமியம் தொகை ₹126. ₹4,000 மாத ஓய்வூதியத்திற்கு ப்ரீமியம் ₹168 ஆகவும், ₹5,000 மாத ஓய்வூதியத்திற்கான மாத பிரீமியம் ₹210 ஆகவும் உள்ளது.
40 வயதில் APY திட்டத்தில் சேர்தால், ₹1,000 மாத ஓய்வூதியத்திற்கான பிரீமியம் ₹291 ஆக இருக்கும். ₹2,000, ₹3,000, ₹4,000, ₹5,000 பென்ஷன் பெற அதற்கு ஏற்ற வகையில் ப்ரீமியம் அளவும் அதிகரிக்கும்