ருசியா சாப்பிட்டுகிட்டே அழகாகலாம்! நோய்களுக்கு குட்பை சொல்லும் வெந்தயக்கீரை!
நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் அடிப்படையாகிறது. அந்த வகையில் நமது வளமான வாழ்க்கைக்கு அவசியமான கீரைகளில் ஒன்றான வெந்தயக் கீரையை எப்படியெல்லாம் சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
வெந்தயக்கீரையில் சிறிதளவு கசப்பு இருக்கும். இந்தக் கீரையை பல்வேறு விதமாக சமைத்து உண்ணலாம். ஆனால் எப்படி உண்டாலும், அது அற்புதமான பலனைத் தரும்
ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமப் பராமரிப்பு, கூந்தல் வளர்ச்சி, தோல் பளபளப்பு என அழகையும் கூட்டும் பண்பைக் கொண்டது வெந்தயம். இதன் கீரை மட்டுமல்ல, முளைக் கட்டிய வெந்தயத்தில் தரமான நார்ச்சத்து இருப்பதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
வெந்தயத்தை சமைத்தும், கீரையாகவும் உண்பதைப் போலவே, அதை ஊற வைத்த தண்ணீரை பருகி வந்தால், உடல் சூடு தொடர்பான பிரச்சனைகள், இரத்த சர்க்கரை அளவு என பல பிரச்சனைகள் தீரும்
சாப்பாத்தி மாவுடன் வெந்தயக்கீரையை சேர்த்து பரோட்டாவாக செய்து உண்டால் அதன் ருசியும் அபாரமாக இருக்கும், ஆரோக்கியமும் மேம்படும்
வெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டால், புரதச்சத்தும் உடலுக்கு சேர்ந்து ஆரோக்கியம் மேம்படும்
வெந்தயத்தை முளைக்கட்டி உண்பது பல்வேறு நோய்களுக்கு அற்புதமான மருந்தாகும், குடல் இயக்கத்தை இயல்பாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க முளைகட்டிய வெந்தயம் அற்புதமான மருந்தாக செயல்படும்