அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக இன்று சட்டசபையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பால், தயிர், மருத்துவ பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும், இதர பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்வதாகவும் மேலும் பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பாட்டீல்கள், கைப்பைகள் உள்ளிட்டவை தடை செய்வதாகவும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. சேமித்து வைக்கவும் கூடாது என்றும் இந்த தடைக்கு பொது மக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தில் தமிழக சட்டசபையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.