இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று கூகிளில் தேடினால், தற்போதைய பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்று உள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், முதல் பிரதமரான நேருவின் குறிப்புகள் அடங்கிய விவரம் விக்கிபீடியாவில் உள்ளது. 


அனைத்து விவரமும் சரியாக கொடுத்து விட்டு நேருக்கு பதிலாக பிரதமர்மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இந்த தொழில்நுட்ப பிழை நடைபெற்ற சிறுது நேரத்தில், அதை பலரும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர்.


மேலும், இது தொடர்பான விளக்கத்தை கூகுள் பக்கத்தில் கேள்விகளாக எழுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை கூகுள் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை


இதற்கு முன்பு உலகில் பத்து குற்றவாளிகள் என்று கூகுளில் டைப் செய்தால்  அதில் மோடியின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.