நடந்து முடிந்த புதுச்சேரி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான திமுக 2 இடங்களையும் கைப்பற்றின. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் முதல்வராக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிப்பதால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.


இதுதொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறுகையில், " முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுசேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகின்றன. இதனால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றனர். இதைகுறித்து விவாதிக்க மேலிடத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.


பல மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்தவுடன் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பதவியேற்பு விழா நடந்து முடிந்துள்ள நிலையில் வெறும் 30 எம்.எல்.ஏ. கொண்டுள்ள புதுச்சேரியில் முதல்வர் பதவிக்காக உட்கட்சியில் குழப்பம் நிலவுவதால் முடிவு எடுக்க முடியாமல் ஆட்சி அமைப்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.