புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.. ஆட்சி கவிழ்வது உறுதியா?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, வேறு இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான - மல்லடி கிருஷ்ணா ராவ் மற்றும் ஏ ஜான் குமார் ஆகியோர் ஜே.பி.நாட்டா தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியில் சேருவார்கள் என்றார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் இருந்து மேலும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளனர் என கூறிய பாஜகவின் முக்கிய தலைவர் வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில், நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கும் என்று அவர் உறுதிப்டக் கூறினார்.சபையிலிருந்து விலகிய நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில், நமச்சிவாயம் மற்றும் இ தீப்பனித்தான் ஆகிய இரு எம் எல் ஏக்களும் ஏற்கனவே பாஜகவில் இணைந்துள்ளனர்.
புதுச்சேரி (Pondicherry) யூனியன் பிரதேசத்தின் பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, வேறு இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான - மல்லடி கிருஷ்ணா ராவ் மற்றும் ஏ ஜான் குமார் ஆகியோர் ஜே.பி.நாட்டா தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியில் சேருவார்கள் என்றார்.
"நிச்சயமாக, 100 சதவீதம்", காங்கிரஸ் அரசாங்கம் சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கும் என்று கூறினார்.
புதுச்சேரியின் புதிதாக நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை சட்டமன்றத்தில்,பிப்ரவரி 22 அன்று நம்பிக்கை வாகெடுப்பை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற உறூப்பினர் பதவியை ராஜினமா செய்ய உள்ள மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பெயரை கூற சூரானா மறுத்துவிட்டார்.
"என்னால் இப்போது அவர்கள் பெயரை கூற முடியாது. அவர்கள் முதல்வர் நாராயணசாமி மீது அதிருப்தி அடைந்துள்ளனர், அவர்கள் ராஜினாமா செய்ய விரும்புகிறார்கள். நூறு சதவீதம் அவர்கள் ராஜினாமா செய்யப் போவது உறுதி" என்று அவர் கூறினார்.
இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் தனது கட்சியில் இணைத்துக் கொள்ள பாஜக திறந்திருக்கிறதா என்பது குறித்து, கேட்கையில், பாஜகவின் சித்தாந்தத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு யார் விரும்புகிறாரோ, அவர்களை இணைத்துக் கொள்ள தனது கட்சி தயாராக உள்ளது என்றார்.
பிப்ரவரி 22 ம் தேதி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதை அடுத்து, ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வியாழக்கிழமை இரவு புதுச்சேரியில் க்கூட்டம் நடத்தினர்.
எதிர்கால நடவடிக்கை குறித்து அவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னதாக மீண்டும் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
33 பேர் கொண்ட சட்டசபையில், 28 உறுப்பினர் ஆதரவுடன், ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் உட்பட பத்து உறுப்பினர்கள் உள்ளனர், அதன் கூட்டணி கட்சியான திமுகவின் மூன்று பேரும், மஹே பிராந்தியத்தில் இருந்து ஒரு சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினரும் அரசுக்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்கள்.
எதிர்க்கட்சிகள் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன, இதில் மூன்று நியமன உறுப்பினர்கள். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை வலு இல்லை என்று கூறியுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு தனது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் நாராயணசாமி, யூனியன் பிரதேச சட்டசபையில் மூன்று நியமன எம்.எல்.ஏக்களுக்கும் (அனைவரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள்) நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களிக்க உரிமை இல்லை என்றும் எதிர்க்கட்சியின் பலம் 11 மட்டுமே என்றும், அவர்கள் கூறுவது போல் 14 அல்ல என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மே மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Tamil Nadu: எண்ணெய், எரிவாயு துறையின் பல செயல்திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR