புதுச்சேரி பேக்கரியில் மறைந்த பாடகர் SPB-க்கு சாக்லேட் சிலை: காணத் திரளும் மக்கள்

தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையின் சிகரமாக வாழ்ந்த SPB, தன்னால் ஆன உதவிகளை எத்தனையோ மக்களுக்கு செய்துள்ளார். அவரது குரலில் இருந்த இனிமை, அவரது செயலிலும் இருந்தது என்று கூறினால் அது மிகையல்ல.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2020, 05:22 PM IST
  • மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யத்தின் நினைவாக சாக்லெட் சிலை.
  • புதுச்சேரியின் ஒரு பேக்கரியில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.
  • இந்த சிலையைக் காண ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
புதுச்சேரி பேக்கரியில் மறைந்த பாடகர் SPB-க்கு சாக்லேட் சிலை: காணத் திரளும் மக்கள் title=

பாண்டிச்சேரியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யத்தின் நினைவாக ஒரு சாக்லேட் சிலை செய்யப்பட்டுள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நம்மை விட்டு சென்றிருந்தாலும், அவரது பாடல்கள் தொடர்ந்து நம்மை உற்சாகப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்றும் அவர் தன் பாடல்களின் மூலம் நம்மை மகிழ்வித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரது ரசிகர்கள் அவ்வப்போது அவரது நினைவில் பல புதிய விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்தும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இப்போது கிறிஸ்துமஸ் (Christmas) மற்றும் புத்தாண்டுக்காக மக்கள் கொண்டாட்டங்களை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த தருணத்தில் பாண்டிச்சேரியில் ஒரு பேக்கரி கடையின் உரிமையாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் (SP Balasubrahmanyam) சாக்லேட் சிலையை உருவாக்கியுள்ளார். செஃப் ராஜேந்திரன் தனது குழுவுடன் சேர்ந்து 5.1 அடி உயரமுள்ள 331 கிலோ எடையுள்ள சிலையை 161 மணி நேரத்தில் உருவாக்கினார்.

ALSO READ: Miss You SPB: மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ!!

SPB-யின் சாக்லேட் சிலை ஜனவரி 3 ஆம் தேதி வரை பேக்கரியில் பொதுமக்களுக்காக காட்சியில் வைக்கப்படும். முன்னதாக, இதே பேக்கரியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் சாக்லேட் சிலைகளை உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சாக்லேட் சிலை ரசிகர்களிடையே அதிக ஈர்ப்பைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் சிலையுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள பேக்கரிக்கு விரைகிறார்கள்.

எஸ்.வி.பாலசுப்பிரமண்யம் ஆகஸ்ட் 5 அன்று COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையின் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 25 அன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

ALSO READ: #IsaiAnjali to SPB: நீங்காத ரீங்காரம் நீதானே, இதயத்தில் இசையாலே இணைந்தாயே!!

அவரது மரணம் அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் பலதரபட்ட மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது.  

தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையின் சிகரமாக வாழ்ந்த SPB, தன்னால் ஆன உதவிகளை எத்தனையோ மக்களுக்கு செய்துள்ளார். அவரது குரலில் இருந்த இனிமை, அவரது செயலிலும் இருந்தது என்று கூறினால் அது மிகையல்ல.

பாடகராய், நடிகராய், சமூக சிந்தனையாளராய், நல்ல மனிதனாய் வாழ்ந்த SPB இன்று நம்மிடையே இல்லை. அவ்வாறு கூறுவது கூட தவறுதான்.

ஒரு உடலாக இருந்த SPB இனி உணர்வாகி விட்டார்!

ஒரு இடத்தில் வாழ்ந்த SPB இனி ஒவ்வொரு இதயத்திலும் வாழ்வார்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News