தெலுங்கானா ஆளுநராக வரும் 8 ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கிறார்

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆளுநராக பதவி ஏற்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2019, 09:08 PM IST
தெலுங்கானா ஆளுநராக வரும் 8 ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கிறார் title=

கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். அதில் ஒருவர் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவார். அவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகளான தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர. அவர் கடந்த 2014 முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தார். தற்போது அவரை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்னும் பெருமையினையும் அவர் பெற்றார். ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்க்க உள்ளதால், தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், முன்னால் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆளுநராக பதவி ஏற்கிறார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Trending News