புதுச்சேரியில், தொடர் மழை காலங்களில் வைரஸ் பரவுவது அடிக்கடி நடக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனை தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், மழை காலங்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலின் எண்ணிக்கை குறைந்திருந்தது. தற்போது, கரோனா தொற்று குறைந்ததை அடுத்து, மக்கள் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை. மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் இடங்களில் சமூக இடைவெளியை யாரும் பொருட்படுத்த மறுக்கிறார்கள். எனவே, தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1 - 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்...


இந்த காய்ச்சலால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் செப். 25ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


மேலும் படிக்க | அதிகரிக்கும் டெங்கு - உஷார் மக்களே...


மேலும் வைரஸ் காய்ச்சல் குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு கூறுகையில்,"கடந்த 10 நாள்களாக புதுச்சேரியில், குழந்தைகள் பெரும்பாலானோருக்கு காய்ச்சல், இரும்மல், சளி ஆகிய அறிகுறிகள் காணப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. குழந்தைகளின் மூச்சுக்காற்றின் மூலமாக காய்ச்சல் வேகமாக பரவும். இதற்கு பள்ளிகளில் தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. காய்ச்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டில் ஓய்வு எடுத்துகொள்ள வேண்டும். மேலும், அவர்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியை நிச்சயம் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். 


தடுப்பு நடவடிக்கைகள்


காய்ச்சல் பரவுவதை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கூறி, சுகாதாரத்துறை பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுரை வழங்கியது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. 


மேலும், இது மழை காலத்தில் வரும் வைரஸ் காய்ச்சல்தான் என்றும் மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாதி ஆகிய அரசு பொது மருத்துவமனைகள், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான 24 மணி நேர சிறப்பு வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் புதுச்சேரி சுகாதாரத் துறை அமைத்துள்ளது. 


பின்பற்ற வேண்டியவை


மக்கள் காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்; முகக் கவசம் அணிய வேண்டும்; தனிப்பட்ட இடைவெளியை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்; வீட்டில் காய்ச்சல் நோயாளிகள் இருந்தால், முகக்கவசம் அணிந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 7 கோடி மக்கள் இந்த நோயால் அவதி, 60 ரூபாய்க்கு மருந்து கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ