புதுச்சேரி: அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த புதுச்சேரியில் நியமன MLAக்கள் உள்பட புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்கின்றனர். தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
   
புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கான 15-வது சட்டமன்றத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூனியன்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது. அதையடுத்து புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார்.


Also Read | முழு ஊரடங்கில் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி


இதையடுத்து தற்காலிக சபாநாயகர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால்,  எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு தள்ளிப்போனது.


கடந்த 17-ந் தேதியன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவர்களின் அறிவுறைப்படி ஒருவாரமாக வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் திரு.ரங்கசாமி.


இந்த காலகட்டத்தில், தற்காலிக சபாநாயகர் நியமனம் தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனை சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.


Also Read | "toolkit" விவகாரம்; ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் தில்லி போலீஸார் சோதனை


இதையடுத்து எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் நாளை (மே 26, 2021, புதன்கிழமை) தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுக் கொள்கிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள விழாவில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் லட்சுமி நாராயணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.  காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெறும்.  


அதன்பிறகு சட்டமன்ற வளாகத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், பிற எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இந்த நிகழ்ச்சி  காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெறும்.


புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவைத்தலைவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.


இதற்குக் அடுத்த கட்டமாக தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் சட்டமன்றத்தை கூட்டுவார். அதில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். அதன்பிறகு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவார்.


Also Read | PSBB Sexual Harassment: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR