புதுச்சேரியில் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே அதகளம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்கள் பிடித்துப் பெரும்பான்மை பலத்தை பெற்றது இந்த வெற்றிக் கூட்டணி.


வெற்றி பெற்றாலும், இன்னும் ஆட்சியில் நிலையாக அமர முடியாமல் இழுபறி நிலை நீடிக்கிறது. முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுக் கொண்ட இரு தினங்களில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.


ALSO READ | CBSE 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு


எனவே அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு நிர்வாகத்தில் கவனம் செலுத்தத் தொடங்க சில நாட்கள் பிடித்தது. அவர் புதுவைக்கு திரும்பிய பிறகு உடனே செயல்படத் தொடங்கினார். 


தற்காலிக சபாநாயகராக எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் மே 26, 2021ஆம் தேதியன்று பதவி ஏற்றுக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதுவரை சரியாக சென்றுக்கொண்டிருந்த அரசியல் கணக்குகள் பிறகு தான் தப்புத்தாளமாக மாறத் தொடங்கின.


கூட்டணிக் கட்சியான பாஜக, துணை முதலமைச்சர் மற்றும் 3 அமைச்சர்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை தொடக்கத்திலேயே நிராகரித்தார் முதலமைச்சர் என்.ரங்கசாமி.


ALSO READ |  12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்? பதிலளித்தார் தமிழக கல்வி அமைச்சர்


சற்று இறங்கிவந்த பாரதிய ஜனதா கட்சி, மூன்று அமைச்சர்கள் மற்றும் பிளஸ் சபாநாயகர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கேட்டது.  இதற்கும் ரங்கசாமி ஒப்புக் கொள்ளவில்லை.


ஆனால் நியமன எம்.எ.ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மூலமாக சட்டசபையில் தமது பலத்தை 12 ஆக அதிகரித்திருக்கிறது பாஜக என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.


முதலமைச்சர் ரங்கசாமிக்கு 10 எம்.எல்.ஏக்கள் இருந்தால், பாஜகவுக்கு 12 எம்.எல்.ஏக்கள் இருந்தால் யார் பலசாலி? இந்த கேள்வி எழுவது இயல்பானதே. அந்த இயல்பான கேள்வி தான், முதலமைச்சரை கலங்க வைத்திருக்கிறது.


Also Read | தமிழகத்தில் +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? முதல்வர் ஸ்டாலின் நாளை அவசர ஆலோசனை


பாஜக அடுத்து என்ன செய்யுமோ என்று கையை பிசைந்துக் கொண்டு இருக்கிறார் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்றால், பாஜக தற்போது அமைச்சரவை தொடர்பாக மவுனமாகிவிட்டது. 


இனிமேல் ரங்கசாமி கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம் என பாஜக அமைதியாக இருப்பதால், அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் புதுச்சேரி மக்களுக்கு மட்டுமல்ல, அரசியல் நோக்கர்களுக்கும் இருக்கிறது. ஆனால், பாஜக, தனது வழக்கமான பாணியை கைப்பிடித்தால், முதலமைச்சர் ரங்கசாமியின் நாற்காலி ஆட்டம் காணும். 


புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம் ஆகாமலேயே மாற்றம் வந்துவிடுமா என்று எம்.எல்.ஏக்களும் பதற்றத்தில் இருக்கிறார்கள். 


தற்போது பாஜகவுக்கு சாதகமாகவே சூழ்நிலை இருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜகவை சேர்ந்தவர் என்பதால், புதுவை முதலமைச்சரின் சங்கடம் நியாயமானதே.


ALSO READ |  12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR