புனே: பூனே-வை சேர்ந்த சம்பா ரமேஷ் சேலார் (வயது 17). இவர் நீச்சலில் சுமார் 32.2 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 9 மணி 10 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த வெள்ளிகிழமையன்று செலான் மார்டின் தீவு ஜெட்ரி-யிலிருந்து டெக்னாஃப் வரை உள்ள நீர்பரப்பில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சாதனையை தொடர்ந்து இவர் கூறியபோது..! 


பஜிராதி ஆற்றில் அடுத்து நடைபெற இருக்கும் 81 கி.மீ நீச்சல் போட்டியில் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்காக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 5 மணிக்கு தனது நீச்சல் பயணத்தை துவங்கிய இவர் சுமார் 32.2 கிலோமீட்டர் தொலைவை 9 மணி நேரம் 10 நிமிடங்களில் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். "இது எனது முதல் சர்வதேச தனி சமுத்திர நிகழ்வு இது'' எனவும் தெரிவித்துள்ளார். இந்த புகழ் அனைத்தும் எனது பயிற்சியாளரான ஜிதேந்திர கஸ்னின் அவர்களுக்கே சேரும் என கூறினார்.   


இதை தொடர்ந்து,  9 மணி நேரம் நீட்சளின் பொது ஏற்பட்ட இன்னல்களை குறித்து அவர் கூறியது;  "நான் என் பயணத்தை துவங்கியதும் சந்தித்த இரண்டு பெரிய பிரச்சனை ஒன்று மீன்கள் மற்றொன்று கடலில் ஏற்பட்ட அலைகளும் தான். நான் என் பயணத்தை துவங்கிய சில நேரத்தில் போது அதிகமான நீர்மட்டத்தை அடைந்தேன். கடலில் ஏற்பட்ட அலைகள் என் வலியை நீண்ட நேரம் முழுவதுமாக தடுத்துவிட்டது என கூறினார். 


இதையடுத்து, பயிற்சியாளர் ஜிதேந்திர கஸ்னின் கூறியபோது....! 


நான் சம்பா ரமேஷ் சேலார்-க்கு நான் 13 வயதிலிருந்தே பயிற்சியளித்து வருகிறேன். இவர் சாதனை படைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவர் குஜராத்தில் 40 கி.மீ. நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தனது முதல் சாதனையை படைத்தார். 


அவர் பங்களா போட்டியில் பங்கேற்ற போது மற்றவர்களை விட சிறுவனாக இருந்தார். அது மட்டும் இன்றி உயர் நீர்மட்டம் காரமாக நான் அவரை பாதியிலேயே திரும்பி வர கூறினேன் என்றார்  ஜிதேந்திர. 


இது இவரது முதல் சர்வதேச சாதனை என்பது குறிப்பிடத்தக்கது..!