தமிழகத்தில் இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 3ம் முதல் நடைபெற்றது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மொத்தம் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த வருடம் முதன் முதலாக ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.  


இந்நிலையில் இந்த ஆண்டு முதல், அண்ணா பல்கலைக்கழகம் இன்ஜினியரிங் கலந்தாய்வை, ஆன்லைனில் நடத்துகிறது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்தல் மே 3ம் தேதி தொடங்கியது. 


ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 


இந்நிலையில், இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் இன்று வெளியிடப்பட்டன. அண்ணா பல்லைகக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விண்ணப்பதாரர்களுக்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். 


மேலும் இன்ஜினியரிங் படிப்புகளுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை வரைசான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.