நடிகர் பாலிவுட் பிரபலம் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற திரைப்படம் தபாங். இப்படத்தின் 3-ஆம் பாகத்தினை நடிகர் பிரபுதேவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல நடிகர் சல்மான் கான் மற்றும் பாபி டியோல் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன்னதாக இவ்விருவரும் இணைந்து யமலா பகதா திவான படத்தில் நடித்தனர். தற்போது ரேஸ் 3 படத்திலும் இணைந்து நடித்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் தபாங் 3-ல் நடிக்கவுள்ளார். இப்படத்தினில் தன் நண்பர் பாபி டியோலுக்கும் நல்ல கதாப்பாத்திரத்தினை வழங்க வேண்டும் என சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சமீப காலமாக தோல்வி படங்களால் மார்கெட்டை இழந்து வரும் பாபி டியோலுக்கு இந்த திரைப்படம் மீண்டும் சந்தையினை பிடிக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் அவரை A வரிசை நடிகரா மாற்ற இந்த படம் ஏதுவாக இருக்கும் எனவும் சல்மான் கான் தரப்பு தெரிவிக்கின்றது.



சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகும் ரேஸ் 3 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலரில் பாபியின் பங்களிப்பு அற்புதமாக இருப்பதாக சல்மான் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னரே பிரபு தேவா-விடம் பாபியின் வாய்ப்பிற்கு பரிந்துறைத்ததாக தெரிகிறது.