லக்னோவில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒரு மணி நேரதிற்கு இரண்டு ரூபாய் கட்டணத்தில் வாடகை சைக்கிள் திட்டத்தை துவங்கியுள்ளனர்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநார் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. நேற்று முன்தினம், லக்னோவில், ஒரு மணி நேரத்துக்கு, இரண்டு ரூபாய் கட்டணத்தில், வாடகை சைக்கிள் திட்டத்தை, மேயர் சம்யுக்தா துவக்கி வைத்துள்ளார்.


இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் அதிகாரி பேசியது..! வாடகை சைக்கிள் வசதியை பயன்படுத்த விரும்புவோர், தங்கள், 'ஸ்மார்ட்' போனில், 'ஜூம்கார்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, வாடகை சைக்கிள் வசதியை பெறலாம்.


ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய இந்த சைக்கிள்களின் பூட்டை, ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி திறக்கலாம். கட்டணத்தை, 'பே - டிஎம்' மூலம் செலுத்த வேண்டும். முதல் கட்டமாக, 12 இடங்களில், வாடகை சைக்கிள் வசதி கிடைக்கும்.சைக்கிளை எடுத்துச் செல்வோர், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே, திரும்ப ஒப்படைக்க வேண்டும். விரைவில் அனைத்து இடங்களிலும் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த வசதி 24 மணி நேரமும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.