COVID-19 நோய்க்கு ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்கவும், நோயாளிகளுக்கு இந்த தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்கவும் Osteoporosis மருந்து உதவும் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. raloxifene என்ற ஆஸ்டியோபோரோசிஸ்க்கான மருந்து இந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இந்த மருந்தைக் கொண்டு கோவிட்-19ஐ குணப்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருத்துவ பரிசோதனைகள் மனிதர்களிடம் விரைவில் தொடங்கப்படும் என்று இத்தாலி கூறுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற சோதனைகளுக்கு முன்னேறியதாக அக்டோபர் 27ஆம் தேதியன்று இத்தாலியின் முக்கிய மருந்துகள் கண்காணிப்பகம் தெரிவித்தது..


வைரஸைத் தடுக்கும் வேதியியல் பண்புகளைக்  கொண்ட குணாதிசயங்களுக்காக 400,000 க்கும் மேற்பட்ட மூலக்கூறுகளை திரையிட சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்தினார்கள். அதன் முடிவில் இந்த மருந்து சாத்தியமான COVID-19 சிகிச்சையாக இருக்கும் என்று அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து மனிதர்களுக்கு பயன்படுத்த ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டது என்பதால் பல்வேறு கட்டங்களை சுலபமாக கடந்து தற்போது மனிதர்களிடம் பரிசோதனை செய்து பார்க்கும் அளவுக்கு இந்த ஆராய்ச்சி முன்னேறிவிட்டது.  


மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய கட்டத்தில் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு சுரக்கும் oestrogen கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பாற்றலை கொண்டுள்ளதாக ஏற்கனவே சில ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன. வயதான பெண்களின் எலும்புகளை வலுப்படுத்துவதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் raloxifene என்ற மருந்தில் குறைந்த அளவிலான oestrogen இருக்கும். இதனால் நோயின் முன்னேற்றத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தற்போது சாதகமான முடிவுகளை கொடுத்திருக்கிறது. அது, மனிதர்கள் மீதான பரிசோதனை என்ற நிலைக்கும் சென்றுவிட்டது ஒரு ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஆகும்.      
ஆரம்ப கட்டத்தில் ரோம் நகரின் ஸ்பல்லன்சானி மருத்துவமனை (Spallanzani Hospital) மற்றும் மிலனில் உள்ள Humanitas உட்பட 450 மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை நடத்தப்படும்.  
அவர்களுக்கு raloxifene காப்ஸ்யூல்கள் ஏழு நாள் வரை அவ்வப்போது கொடுத்து சிகிச்சை அளிக்கப்படும். இறுதிக் கட்டத்தில் மேலும் 174 பேர் சேர்க்கப்படலாம். 12 வாரங்கள் வரை இந்த சோதனை நீடிக்கும்.


எக்ஸலேட் 4 கோவ் இயங்குதளம் (Excalate4Cov platform) ஐரோப்பிய ஆணையத்தால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டிங் மையங்களை மருந்து நிறுவனங்கள் மற்றும் லூவேன் பல்கலைக்கழகம், ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிடியூட், பாலிடெக்னிகோ டி மிலானோ மற்றும் ஸ்பல்லன்சானி மருத்துவமனை உள்ளிட்ட ஆராய்ச்சி மையங்களுடன் ஒருங்கிணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.


இந்த பரிசோதனையில் 500 பில்லியன் மூலக்கூறுகளைக் (molecules) கொண்ட ஒரு வேதியியல் நூலகம் (chemical library) பயன்படுத்தப்படுகிறது. மேலும், 122 க்கும் மேற்பட்ட Petaflopகளின் நான்கு சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி வினாடிக்கு 3 மில்லியன் மூலக்கூறுகளை செயலாக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. அதாவது வினாடிக்கு ஆயிரம் டிரில்லியன் floating-point செயல்பாடுகளுக்கு சமமான கணினி வேகத்தின் ஒரு அலகு என்று சொல்லலாம்.


12 கொரோனா வைரஸ் புரதங்களின் முப்பரிமாண கட்டமைப்பை உருவாக்க சூப்பர் கம்ப்யூட்டர்களின் உதவியை ஆராய்ச்சியாளர்கள் நாடினார்கள். அதுமட்டுமல்ல, புரதங்களை மருந்து எங்கு தாக்கும் என்பது தொடர்பான ஊகங்களும், சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகை மீட்டெடுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் பாகீரத பிரயர்த்தனம் செய்து வருகின்றனர். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று உலகமே ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் வருபவர்கள் யார், எந்த மருந்து கொரோனா என்ற பெருந்தொற்றை தாக்கி முடக்கும் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த ஆராய்ச்சியின் முன்னேற்றம் அனைவரின் கவனத்தையும் இத்தாலியை நோக்கி திருப்பியுள்ளது.


தொடர்புடைய செய்தி | கொரோனா தடுப்பூசியுடன் முடிவடையாது என நிபுணர்கள் எச்சரிக்கை..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR