இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று. நிகழவிருக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலவு வரும்போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும்.

 

டிசம்பர் 14ஆம் தேதியன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஏனெனில் இந்த சூரிய கிரகணம் (Solar Eclipse) இரவில் நிகழ்கிறது, அதனால் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.  

 

இந்த ஆண்டில் இரண்டு சூரியக் கிரகணங்கள் நிகழும் என்று வானியல் ஆய்வாளர்கள் கணித்தனர். அதன்படி, முதலாவது சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று நடைபெற்றது. இரண்டாவது, சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. ழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தின்போது, சூரிய ஒளியை நிலவு முழுமையாக மறைக்கும் என்பதால், இதற்கு  முழு சூரிய கிரகணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

 


 

இன்றைய சூரிய கிரகணம் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் தெரியும். இந்தியாவில் முன்னிரவு நேரத்தில் வருவதால் இந்த சூரிய கிரகணம் தெரியாது.

 

ஆனால் ஜோதிடத்தை (Astrology)  நம்பும் இந்தியாவில் இதற்கான பலன்களும், பரிகாரங்களும் செய்யப்படுகிறன. அதற்கு அவசியம் ஏதும் இல்லை.அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) உலகில் எங்கிருந்தும் சூரிய கிரகணத்தைப் பார்க்க மக்கள் ஒரு நேரடி link-ஐ வழங்கியுள்ளது.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR