இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை அதாவது திங்களன்று நிகழவிருக்கிறது. இந்த சூரிய கிரகணம் பெரும்பாலும் தென் அமெரிக்காவில் தெரியும். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் எப்பொழுதாவது சந்திரன் குறுக்கிடும்போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும்.
டிசம்பர் 14ஆம் தேதியன்று நிகழ இருக்கும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஏனெனில் இந்த சூரிய கிரகணம் (Solar Eclipse) இரவில் நிகழ்கிறது, அதனால் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை. இது, நாளை நடைபெறவிருக்கும் சூரிய கிரகணம் பற்றிய நாசாவின் டிவிட்டர் செய்தி.
On Mon., Dec. 14, a solar eclipse will pass over South America with parts of Chile & Argentina in the path of totality. Enjoy real-time views on NASA TV starting at 9:40am ET & an all Spanish-language program with @NASASun scientists at 10:30am: https://t.co/zRP7YE1ZjV pic.twitter.com/4iWcVcTrBE
— NASA (@NASA) December 10, 2020
ஆனால் ஜோதிடத்தை (Astrology) நம்பும் இந்தியாவில் இதற்கான பலன்களும், பரிகாரங்களும் செய்யப்படுகிறது. விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்திலும், தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்தில் இதன் பாதிப்பு இருக்கும்.
தென் அமெரிக்கா (South America) நேரப்படி மாலை 4 மணி 13 நிமிடம் வரை நீடிக்கும் சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இரவு 9 மணி 43 நிமிடம் வரை நீடிக்கும்,
இதற்கு முன்பு ஏற்பட்ட சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று நிகழ்ந்தது. இதுவரை, 2020-ம் ஆண்டில் நான்கு பெனும்பிரல் சந்திர கிரகணங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) உலகில் எங்கிருந்தும் சூரிய கிரகணத்தைப் பார்க்க மக்கள் ஒரு நேரடி link-ஐ வழங்கும்
பெரும்பாலும் ஆண்டுக்கு இரண்டு சூரிய கிரணங்கள்கள் ஏற்படுவது வழக்கம். அதிகபட்ச சூரிய கிரகணங்கள் ஏற்பட்ட ஆண்டு 1935 என நாசா (NASA) தெரிவித்துள்ளது. அத்தகைய நிகழ்வு மீண்டும் 2206 இல் நடக்கும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR