ஜூன் 24ஆம் தேதியான இன்று, சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வருகிறது. ஒரு ஆரஞ்சு நிறத்துடன் தோன்றும் இந்த நிலாவை ஸ்ட்ராபெரி மூன் (Strawberry Moon) அதாவது பெருநிலவு என்று அழைக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாத சூப்பர்மூனுக்குப் பிறகு, விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் சந்திரனை வணங்குபவர்களுக்கு இன்று (ஜூன் 24) மிகவும் முக்கியமான நாள். ஆனி மாத பெளர்ணமி தினம், ஆன்மீக ரீதியிலும் முக்கியத்துவத்துவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜூன் மாதத்தின் முழு நிலவு, “சூப்பர் ஸ்ட்ராபெரி மூன்” என அழைக்கப்படுகிறது, இது இந்த ஆண்டின் கடைசி மற்றும் அதிகம் ஒளிரும் நிலவாக இருக்கும்.


Also Read | #Astrology பூரண சந்திர கிரகணம்: எப்படி? எங்கு? பார்க்கலாம்!!


ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் இன்றைய நிலவு, அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், வானில் நிலவு ஜொலிக்கும். இருந்தாலும்கூட, இந்த சூப்பர்மூன், கடைசி மூன்று முழு நிலவுகளை விட இன்னும் சற்றுத் தொலைவில் இருக்கும் என்று நாசா (NASA) கூறுகிறது.


இன்றைய நிலவு ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் என்று அழைக்கப்படுவது ஏன்?


ஸ்ட்ராபெரியின் எந்தவொரு அம்சத்தையும் இந்த நிலவு ஒத்திருக்காது. வட அமெரிக்காவின் அல்கொன்கின் பழங்குடியினர் (Algonquin tribes) இந்த பெயரை வைத்தனர். ஜூன் மாத நிலவின் தோற்றத்தை பெர்ரி பழ அறுவடை பருவத்துடன் இணைத்து இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.  


இன்றைய நிலவு, ஸ்ட்ராபெரிமூன் என்று மட்டுமல்ல, "சூடான நிலவு" (hot moon), "ரோஸ் மூன்" (rose moon), "ஹனிமூன்" (honey moon) எனவும் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. ஹனிமூன் என்ற சொல் வரக் காரணம் என்ன தெரியுமா? இந்த மாதத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடைபெறுமாம். திருமணத்திற்கும், நிலவுக்கும் ஒரு தொடர்பு இருப்பதால், அது மனதிற்கு இனிமையானதாகவும் இருப்பதால் இன்று தோன்றும் நிலவுக்கு "ஹனிமூன்" (honey moon) என்று பெயர் வந்தது என்பது சுவாரசியமான தகவல்.


Also Read | Super Blood Moon 2021: முழு சந்திர கிரகணம் - ரத்த நிலவு எப்போது, ​​எங்கே, எப்படி பார்ப்பது?


பூமியை, சந்திரன் ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. எனவே அது ஒரு சில நேரங்களில் பூமிக்கு அருகிலும் சில நேரங்களில் சற்று தொலைவிலும் இருக்கும், நிலவு அருகில் இருக்கும் போது, அது முழுநிலவாக இருந்தால் அன்றைக்கு நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு அதிகமாக ஒளிரும். அதுவே பெருமுழுநிலவு என்று அழைக்கப்படும். ஒரு வருடத்தில் நான்கு முதல் ஆறு பெருநிலவுகள் தோன்றும்.


லைவ் சயின்ஸுக்கு அளித்த பேட்டியில், நாசாவின் அறிவியல் தொடர்பாளர் ஆண்ட்ரியா ஜோன்ஸ் இவ்வாறு கூறுகிறார்: "பவுர்ணமி நாளன்று, சூரியன், பூமி மற்றும் சந்திரன் என மூன்றும் 180 டிகிரி வரிசையில் நேர்க்கோட்டில் வருகின்றன. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை பூமியிலிருந்து சற்று மாறுபட்டு (இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 5 டிகிரி விலகியிருக்கிறது) இருக்கிறது.


எனவே, மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழலை விட சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். அதாவது சூரியனின் ஒளி பூமியை எதிர்கொள்ளும் போது, சந்திரனின் பக்கம் ஒளிரும்".  


1979 ஆம் ஆண்டில் “சூப்பர்மூன்” என்ற வார்த்தையை உருவாக்கியவர் ஒரு ஜோதிடர் (astrologer) தான். வழக்கத்திற்கு மாறாக பூமிக்கு நெருக்கமாக நிலவு வருவதால் இந்த பெயர் வைக்கப்பட்டது.  


Also Read | Meditation: தியானம் செய்யும்போது தூக்கம் வர என்ன காரணம்? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR