Sleepy Meditation: தியானம் செய்யும்போது தூக்கம் வர என்ன காரணம்?

தியானம் செய்யும்போது, சில சமயங்களில் நம்மையும் அறியாமல் தூங்கிவிடுவோம். அதற்கான காரணம் என்ன என்பதற்கான ஆய்வு பல ஆச்சரியமான ஆனால் எளிய விஷயங்களை வெளிப்படுத்துகிறது 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2021, 01:40 PM IST
  • தியானம் செய்யும்போது தூக்கம் வர என்ன காரணம்?
  • அருகில் யாராவது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் தூக்கம் வரும்
  • படுக்கையறையில் தியானித்தால், துயில் வரும்
Sleepy Meditation: தியானம் செய்யும்போது தூக்கம் வர என்ன காரணம்? title=

தியானம் என்பது ஓய்வெடுப்பதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும், மன நிம்மதி பெறுவதற்கும் உதவும் சிறந்த வழிமுறையாகும். அமைதியான நிலையைக் கண்டறிய பயன்படும் தியானம் செய்யும்போது, சில சமயங்களில் நம்மையும் அறியாமல் தூங்கிவிடுவோம். அதற்கான காரணம் என்ன என்பதற்கான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் பல ஆச்சரியமான ஆனால் எளிய விஷயங்கள் தெரிய வந்துள்ளன.

தியானம் செய்வதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக இருந்தால், உறக்கத்திலும் விழிப்புநிலை இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் அனைவருக்கும் இந்த மனநிலை வாய்க்காது. விழிப்புடன் தியானம் செய்வதால் தான் அதன் முழுமையான பலன்கள் கிட்டும்.

தியானத்தை எவ்வாறு நிதானமாகப் விழிப்புணர்வுடன் செய்து, மன அழுத்தத்தை குறைப்பது என்பதை அந்த ஆய்வு கோடிட்டுக் காட்டியுள்ளது.

Also Read | Yoga Day 2021: ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா

தியானம் மற்றும் தூக்கத்தின் பின்னால் உள்ள அறிவியல் மிகவும் எளிமையானது. தியானம் என்பது இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கும், ஆரோக்கியமான வாழ்வுக்கும் உறுதுணையாக இருக்கிறது என்பதோடு, தியானத்தின் போது தூங்காமல் இருந்தால், நீங்கள் உறங்கும்போது, அது தரமானதாக இருக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 11 நிமிட யோகா நித்ரா (yoga nidra) தியானத்தின் விளைவுகள் தொடர்பான ஆய்வு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவர்களுக்கு மன அழுத்தம் குறைந்தது என்பதும், வாழ்வு மேம்பட்டதும் தெரியவந்தது. 

ஆய்வில் கலந்துக் கொண்ட 341 பேருக்கு தூக்கத்தின் தரம் மேம்பட்டது. 430 பேருக்கு எந்த மாற்றமும் இல்லை. தியானத்தின் விளைவுகள் 6 வாரங்கள் அளல்வுக்கு நிலையானதாக இருந்தன.

Also Read | Power of Yoga: மனோரீதியான பாதிப்பை குறைக்கும் யோகா 

தியானத்தை முறைப்படி செய்வது தூக்கத்தின் தரத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதோடு, தியானம் செய்யும்போது உறக்கம் வர சாத்தியமான சில காரணங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

தியானத்திற்கும் தூக்கத்திற்கும் இடையிலான மூளை அலை செயல்பாட்டில் ஒற்றுமைகளே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். இதைத் தவிர, தூக்கமின்மை அல்லது பகல்நேர சோர்வு தியானத்தில் துயில் வர காரணம் ஆகலாம்.

அடுத்து, தியானம் செய்யும் இடத்திற்கு அருகில் யாராவது உணவு உண்பதும் ஒரு காரணம் என்று தெரியவந்துள்ளது. படுக்கையில் அமர்ந்துக் கொண்டோ அல்லது படுக்கையறையில் தியானம் செய்தாலோ, தியானம், துயிலாக மாறிவிடுகிறது.

நோய் அல்லது மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போதும் தியானத்தில் கவனம் குவியாமல் உறக்கம் வந்து விடுகிறதாம்!!!

Also Read | International Yoga Day 2021: முழுமையான ஆரோக்கியத்தை வழங்கும் யோகா  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News