Alien Life: வேற்று கிரகவாசிகளை பார்க்க வேண்டுமா? கூடுதல் இணைப்பாக வைரசும் கிடைக்கலாம்!
அன்னிய கிரகத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அது சாத்தியமாகுமா இல்லையா என்பது ஒருபுறம், ஆனால் அதற்கு முன்னால், பல்வேறு வைரஸ்களை மனித குலம் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள்!
அன்னிய கிரகத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அது சாத்தியமாகுமா இல்லையா என்பது ஒருபுறம், ஆனால் அதற்கு முன்னால், பல்வேறு வைரஸ்களை மனித குலம் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள்!
வேற்று கிரகவாசிகள் தொடர்பான தகவல்களை அறிந்துக் கொள்வதும், அவர்களை தேடும் விருப்பமும் பலரிடையே அதிகமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உற்சாகமும் கவர்ச்சியும் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் திரைப்படங்கள் மற்றும் பிரபல ஊடகங்களில் வேற்று கிரகவாசிகள் தொடர்பான தகவல்களை தெரிந்துக் கொள்வதாக இருக்கும்.
ஏலியன்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்த பிறகு, அவர்களை தேடுவதற்கான விருப்பங்கள் அதிகரித்துள்ளதாம். எனவே இனிமேல் வேற்று கிரகவாசிகள் பூமியின் மீது தாக்குதல் நடந்தால், நம்மில் பலர் "அய்யய்யோ!" என்பதற்கு பதிலாக "கூல்!!" என்று சொல்லலாம்.
Also Read | புகுஷிமா அணுசக்தி பேரழிவின் தாக்கத்தை கண்காணிக்கும் கதிரியக்க பாம்புகள்
பூமியில் வாழ்க்கை சிரமமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், வேறு கிரகங்களிலும் வாழ்க்கை சிக்கலாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் (ASU) வானியற்பியல் நிபுணர் ஒருவர். வேற்று கிரக வாழ்வுக்கான தேடலில் புதிய வைரஸ்கள் நம்மை தாக்கலாம் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது.
கொரோனா வைரஸால் நாம் சந்தித்த இன்னல்கள் இன்னும் முடிவுக்கு வராமல், அடுத்த அலை எப்போது என்று அச்சத்துடன் இருக்கும்போது, மேலும் வைரஸ்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் உலகில் உயிரினங்கள் தங்கள் வாழ்க்கையை தக்கவைக்க, பல நுண்ணிய வைரஸ்கள் தேவை என்று சொல்கிறார் ASU இன் பால் டேவிஸ் (Paul Davis).
"வைரஸ்கள் உண்மையில் வாழ்க்கைச் சங்கிலியின் ஒரு பகுதியாகும்" என்று டேவிஸ் தி கார்டியன் பத்திரிகையிடம் தெரிவித்தார். வேற்றுகிரக உயிரினங்களில் நுண்ணுயிரிகளின் முழு சுற்றுச்சூழல் அமைப்பு இருக்கும் என்று அவர் நினைக்கிறார். வைரஸ்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர் கருதுகிறார்.
வேற்றுகிரக நுண்ணுயிரிகளால் நிரப்பப்பட்ட ஒரு வித்தியாசமான கிரகத்தை கற்பனை செய்வது உண்மையில் திகிலூட்டுகிறது. பூமியில் உள்ள நுண்ணுயிரிகள் உயிரினங்களை மாற்றியமைத்து நம்மை பாதிக்க முடியும். ஆனால் ஒரு வைரஸ் உண்மையிலேயே வேற்று கிரகத்தை சேர்ந்ததாக இருந்தால், அது நம்மைத் தொற்றாது.
ALSO READ | Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR