நிலவுக்கு மனித பயணத்தின் முதல் படி.. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட Artemis 1 ராக்கெட்
Moon Rocket Artemis 1: நாசா ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் நிலவை நோக்கி சென்றது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பணியை மேற்கொண்டுள்ளது.
Moon Rocket Mission: உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் நாசாவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரனை நோக்கி தனது ராக்கெட் பயணத்தை வெற்றிகரமாக ஏவியுள்ளது. ராக்கெட் என்ஜின் கோளாறு, எரிபொருள் கசிவு, சூறாவளி புயல் என இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும், நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியான திட்டத்தை நாசா இன்று (புதன்கிழமை) மதியம் 12.17 மணியளவில் செயல்படுத்தி உள்ளது. நாசாவின் நிலவுக்கு ஆட்கள் அனுப்பும் பயணத்தின் திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ்-1 செயல்பாடு மிக முக்கியமான பணியாகும். இந்த ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை நாசா சந்திரனுக்கு அனுப்புகிறது. இந்த விண்கலம் 42 நாட்களில் நிலவுக்கு பயணம் செய்து திரும்பும். இந்த பணி பற்றிய அனைத்து முக்கிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆர்ட்டெமிஸ்-1 மிஷன் என்றால் என்ன?
புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் உள்ள லாஞ்ச் பேட் 39B இலிருந்து SLS ராக்கெட் மற்றும் ஓரியன் ஏவப்பட்டது. இது 90 வினாடிகளில் வளிமண்டலத்தின் உச்சியை அடையும். இது 42 நாட்கள், 3 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்கள் இதன் பணி நேரமாகும். சந்திரனுக்கு வெளியே சுற்றுப்பாதை தான் இதன் இலக்காகும். 21 லட்சம் கிலோமீட்டர்கள் தூரம் பயணிக்கும். அதன் பிறகு சான் டியாகோவைச் சுற்றியுள்ள பசிபிக் பெருங்கடலில் பகுதியில் இறக்கப்படும்.
ஆர்ட்டெமிஸ்-1 பணி ஏன் முக்கியமானது
ஆர்ட்டெமிஸ்-1 பயணத்தின் போது, ஓரியன் மற்றும் எஸ்எல்எஸ் ராக்கெட்டுகள் சந்திரனை அடைந்து ஆராய்ச்சி மேற்கொண்டு பூமிக்குத் திரும்பும். இந்த காலக்கட்டத்தில் இரு ராக்கெட்டுகளும் எவ்வாறு செயல்படுகிறது என்பது கண்காணிக்கப்படும். அதாவது எதிர்கால நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திற்கு முன் இது ஒரு லிட்மஸ் சோதனையாகும். இது வெற்றியடைந்தால், 2025-ம் ஆண்டுக்குள், ஆர்ட்டெமிஸ் மிஷன் போல, விண்வெளி வீரர் சந்திரனுக்கு முதல்முறையாக அனுப்பப்படுவார். தற்போது அனுப்பட்டுள்ள ஆர்ட்டெமிஸ்-1 செயல்பாட்டை பொறுத்து, நிலவுக்கு மனிதர்களை அனுப்ப தேவையான பிற நுட்பங்களை நாசா விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள். இதன்மூலம் சந்திரனைத் தாண்டி செவ்வாய்க்கு பயணம் செய்ய முடியும்.
ஓரியன் விண்கலம் என்றால் என்ன?
ஓரியன் விண்கலம் உலகின் மிக சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய ராக்கெட்டின் மேல் பகுதியில் இருக்கும். இந்த விண்கலம் மனிதர்களின் விண்வெளி பயணத்திற்காக தயாரிக்கப்பட்டது. இதுவரை எந்த விண்கலமும் செய்யாத தூரத்தை இது கடக்கும். ஓரியன் விண்கலம் முதலில் பூமியிலிருந்து சந்திரனுக்கு 4.50 லட்சம் கிமீ தூரம் பயணிக்கும். அதன் பிறகு நிலவின் இருண்ட பகுதியை நோக்கி 64 ஆயிரம் கிமீ தூரம் செல்லும். சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படாமல் இவ்வளவு நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் முதல் விண்கலம் ஓரியன் விண்கலமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ