சியாட்டில்: கிரகணம் என்பது சில மணி நேரம் அல்லது சிலபல நிமிடங்கள் மட்டுமே பார்த்திருக்கிறோம். ஆனால், ஏழுவருட கிரகணம் என்பதை கேள்விப்பட்டிருக்கவே முடியாது. ஆனால், பல்வேறு மர்மங்களையும் ரகசியங்களையும் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில் எதுவும் எப்படியும் நடக்கலாம் என்பது விந்தையான ஒன்று. அசாதாரணமான ஏழு வருட கிரகணத்தில் இருந்து வெளிவரும் நட்சத்திரம், வானியலாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. 7 ஆண்டுகள் நீடிக்கும் கிரகணம் என்பது நம்மால் நம்ப முடியாவிட்டாலும், ஆதாரங்களுடன் சொல்லும்போது நம்பித் தானே ஆக வேண்டும்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகணம் என்பது என்ன?
கிரகணம் என்பது, வானியல் பொருள் ஒன்று வேறொரு பொருளின் நிழலினால் மறைக்கப்படுவது அல்லது வானில் உள்ள கிரகத்திற்கும் பார்ப்பவர்களுக்கும் இடையில் மற்றொரு பொருள் வரும்போது ஏற்படும் தற்காலிக கிரக மறைப்பு ஆகும். இந்த வானியல் நிகழ்வு பெரும்பாலும், சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என நாம் அவ்வப்போது இயல்பாக  பார்க்கும் நிகழ்வு ஆகும்.


மேலும் படிக்க | Virovore: கொரோனாவுக்கே டஃப் ஃபைட் கொடுத்து அழிக்க வந்த உயிரினம்!


கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் சந்திரனின் நிழல், பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையும், நிலா பூமியின் நிழலினுள் செல்லும் போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆகியவற்றை விவரிக்க பயன்படுத்துகிறோம். ஆனாலும், பூமி-சந்திரன் தவிர்ந்த வேறு தொகுதிகளுக்கும் கிரகணம் ஏற்படுகிறது.


உதாரணமாக, கோள் ஒன்று தனது நிலவுகளில் ஒன்றின் நிழலினுள் செல்லும்போது, அது மறைக்கப்படுவதையும் கிரகணம் என்று சொல்கிறோம். அதேபோல, இரும விண்மீன் தொகுதி ஒன்றிலும் கிரகணம் ஏற்படும்.



2013ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் ஏவப்பட்ட கயா விண்கலம், இன்றுவரை பால்வீதி விண்மீனின் மிகத் துல்லியமான 3D வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த விண்கலன், 2014 இல் நட்சத்திரத்தை கவனிக்கத் தொடங்கியது.


கயா விண்கலத்தில் இருந்து வரும் புகைப்படங்களும், அவதானிப்புகளும், சாத்தியமான நட்சத்திர விந்தை பற்றிய எச்சரிக்கைகளை வழங்குகிறது. வழக்கத்திற்கு மாறாக பிரகாசமான நட்சத்திரத்தின் பின்னால் உள்ள மர்மங்களைத் தீர்க்கவும் இந்த விண்கலம் உதவுகிறது.


வாஷிங்டன் பல்கலைகழக முனைவர் பட்ட மாணவர் Anastasios Tzanidakis மற்றும் வானியல் ஆராய்ச்சி உதவி பேராசிரியர் ஜேம்ஸ் டேவன்போர்ட் ஆகியோர் "விசித்திரமாக நடந்து கொள்ளும் நட்சத்திரங்களை" தேடிக் கொண்டிருந்தனர், அப்போது, Gaia17bpp என்ற நட்சத்திரம் 2.5 வருட காலப்பகுதியில் படிப்படியாக ஒளிர்வு அதிகரித்து வந்ததை அவர்கள் அவதானித்தனர்.  


புதன்கிழமை (ஜனவரி 11, 2023) சியாட்டிலில் நடந்த அமெரிக்க வானியல் சங்கத்தின் 241வது கூட்டத்தில் இருவரும் தங்கள் ஆய்வை சமர்ப்பித்தனர். அந்த நட்சத்திரம் மாறவில்லை என்பதை வெளிப்படுத்திய அவர்கள், ஆனால் "ஏழு வருட போட்டோபாம்ப்" என்று அழைக்கும் ஒரு விசித்திரமான கிரகணமே இதற்குக் காரணம் என்றும் ஆதாரங்களுடன் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | Research: கண்ணாடித் தவளைகளின் நிறமற்றத் தன்மைக்கு காரணம் இதுதான்


"இந்த நட்சத்திரம் ஒரு பெரிய, வீங்கிய பழைய நட்சத்திரம், Gaia17bpp மற்றும் ஒரு சிறிய துணை நட்சத்திரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு விதிவிலக்கான அரிய வகை பைனரி அமைப்பின் ஒரு பகுதி என்று நாங்கள் நம்புகிறோம், இது தூசி நிறைந்த பொருட்களின் விரிவான வட்டால் சூழப்பட்டுள்ளது" என்று Tzanidakis தெரிவித்தார்.


"எங்கள் பகுப்பாய்வின் அடிப்படையில், இந்த இரண்டு நட்சத்திரங்களும் நீண்ட காலத்திற்கு, 1,000 ஆண்டுகள் வரை ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இது நிச்சயமாக விதிவிலக்கானது தான். இந்த பிரகாசமான நட்சத்திரத்தை அதன் தூசி நிறைந்த துணை நட்சத்திரம் மறைக்கும் கிரகண நிகழ்வு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடைபெறும்” என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


ஹவாயில் உள்ள Pan-STARRS1 தொலைநோக்கி, NASA WISE/NEOWISE மிஷன் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள Zwicky Transient Facility ஆகியவற்றால் எடுக்கப்பட்ட Gaia17bpp இன் மற்ற அவதானிப்புகளுடன் சேர்ந்து நட்சத்திரத்தைப் பற்றிய Gaiaவின் அவதானிப்புகள், 2010 ஆம் ஆண்டு வரையிலான இறுதி முடிவுகளுக்கு வழிவகுத்தன.


பல ஆண்டுகளாக நீடித்த கிரகணத்தின் முடிவில் வானியலாளர்களால், அந்த நட்சத்திரத்தைப் பார்க்க முடிந்தது. 2012 முதல் 2019 வரை ஏழு ஆண்டுகளுக்கு அதன் பிரகாசம் 4.5 ஆர்டர்கள் அல்லது 45,000 மடங்கு குறைந்துள்ளது. ஆனால், அதன் அருகில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் எதுவும் இதேபோன்ற செயல்பாட்டைக் காட்டவில்லை.


மேலும் படிக்க | Spy Rat: உளவாளியாக மாறும் எலிகள்! அதிசயமான கற்பனைக்கெட்டாத கண்டுபிடிப்பு


"66 ஆண்டுகளுக்கும் மேலான கண்காணிப்பு வரலாற்றில், இந்த நட்சத்திரத்தில் குறிப்பிடத்தக்க மங்கலுக்கான வேறு எந்த அறிகுறிகளையும் நாங்கள் காணவில்லை" என்று விஞ்ஞானி சானிடாகிஸ் கூறினார்.


"தற்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், இந்த நட்சத்திரம் மெதுவாக நகரும் துணை நட்சத்திரத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது, அது ஒரு பெரிய வட்டு பொருளால் சூழப்பட்டுள்ளது" என்று Tzanidakis கூறினார். "அந்தப் பொருள் சூரியக் குடும்பத்தில் இருந்தால், அது சூரியனிலிருந்து பூமியின் சுற்றுப்பாதைக்கு அல்லது அதற்கும் மேலாக நீண்டிருக்கும்."


இதேபோன்ற நடத்தையைக் காட்டும் பிற பைனரி நட்சத்திர அமைப்புகளும் உள்ளன. Epsilon Aurigae இல் உள்ள ஒரு நட்சத்திரம், 27 ஆண்டுகளில் இரண்டு முறை, ஒரு பெரிய துணை நட்சத்திரத்தால் கிரகணத்தை அனுபவிக்கிறது.


பெட்டல்ஜியூஸ் என்ற மாபெரும் நட்சத்திரம் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வியத்தகு முறையில் மங்கலானபோது வானியலாளர்களை ஈர்க்கும் மையமாக மாறியது. வல்லுநர்கள் இது ஒரு சூப்பர்நோவாவாக வெடிக்கும் என்று நினைத்தார்கள், ஆனால் அதற்கு பதிலாக அது ஒரு டைட்டானிக் மேற்பரப்பில் கணிசமான அளவு குறைந்து, அதன் புலப்படும் மேற்பரப்பில் குறிப்பிடத்தக்க அளவிலான பகுதியை இழந்தது. வானவியல் என்பது என்றும் மர்மங்களாலும் அதிசயங்களாலும் நம்மை பிரமிக்க வைக்கிறது.


மேலும் படிக்க | பூமியை தாக்க வரும் செயற்கைகோள்... உதிரிபாகங்கள் மனிதர்கள் மீது விழுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ