எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக கோவிட் நோய் இருந்திருக்கிறது. அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? ஆச்சரியமான ஆய்வு சொல்லும் உண்மை இது…


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்காவில் எச்.ஐ.வி தொற்று இருந்த ஒரு பெண்ணுக்கு ஆறு மாதங்களாக கொரோனா பாதிப்பு இருந்திருக்கிறது. அது 30 முறை பிறழ்ந்ததாம்! இதை சொல்வது ஒரு விஞ்ஞானரீதியான ஆய்வு.


கொரோனாவின் இரண்டாவது அலை, COVID-19 தொற்றுநோயில் பல பிறழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை யாராலும் சொல்லிவிட முடியாது என்பதை அண்மையில் நடைபெற்ற ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.


எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான ஒரு பெண்ணுக்கு 216 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது, இந்த ஆறு மாத காலத்தில் குறைந்தது 30 முறை பிறழ்ந்தது என்று ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு மதிப்பாய்வு (review) செய்யப்படுவதற்காக நிலுவையில் இருக்கிறது.


Also Read | Google Chrome பாதுகாப்பு விதிகளில் மாற்றம் செய்கிறது; பயனர்கள் be ALERT 


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு 6 மாதஙக்ளுக்கும் மேலாக கோவிட் இருந்ததாகவும், அது பல முறை பிறழ்வானதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் ஸ்பைக் புரதத்தில் 13 முறை பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும், ஆய்வின்படி 19 பிற பிறழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


வைரஸை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனைக் குறைக்கும் பிற நீண்டகால நோய்களைக் கொண்டவர்களின் உடலில் ஒழுங்கற்ற கொரோனா வைரஸ் எவ்வாறு மாறக்கூடும் என்பதை இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


"பெரும்பாலான மக்களுக்கு Sars-CoV-2-2 ஐ திறம்பட அழிக்கும்போது, நோயெதிர்ப்பு சக்தியற்ற நபர்களில் நீடித்த நோய்த்தொற்று பற்றிய வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உள்ளன. HIV முற்றிய நிலையில் உள்ள ஒரு பெண்ணுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக SARS-CoV-2 தொற்று இருக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட ஆன்டிரெட்ரோ வைரல் (antiretroviral) சிகிச்சை தோல்வியடைந்தது” என்று அந்த ஆய்வு கூறுகிறது.


COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் விளைவாக அந்த பெண்ணுக்கு இந்த  பிறழ்வுகள் ஏற்படுவதில்லை என்று அந்த ஆய்வு மேலும் கூறியுள்ளது.


Also Read | புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வெங்காயத்தாளின் நன்மைகள்


"தீவிரத்தன்மையுடன் கூடிய நோய் இருந்தபோதிலும், SARS-CoV-2 PCR அந்தப் பெண்ணுக்கு 216 நாட்கள் வரை நீடித்தது. அந்த நேரத்தில் வைரஸில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாங்கள் நிரூபிக்கிறோம், ஸ்பைக் RBD மற்றும் N டெர்மினல் டொமைனில் (NTD) உள்ள முக்கிய நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடி எபிடோப்களில் பல பிறழ்வுகள் காணப்பட்டது. நோயெதிர்ப்பு அடிப்படையிலான சிகிச்சைகள் (சுறுசுறுப்பான பிளாஸ்மா அல்லது மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள்) கொடுத்ததால், வைரஸ் பிறழவில்லை” என்று ஆய்வு மேலும் கூறியுள்ளது.


கொரோனா வைரஸ், ஒருவரின் உடலில் பல முறை மாற்றமடையக்கூடும் என்பதையும், பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை (immune system) தாக்கும் என்பதையும் இது உணர்த்துகிறது. ஆனால், இது போன்றவர்களிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கு தொற்றுகிறதா என்பதை இந்த ஆய்வு குறிப்பிடவில்லை. ஆனால், கொரோனா பாதித்த எச்.ஐ.வி நோயாளிகளின் இறப்பு விகிதம், மற்றவர்களை விட 2.75 மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதும், வைரஸின் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.  


Also Read | சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR