சந்தோஷம்...ஓசோன் ஓட்டை மூடுகிறது - விஞ்ஞானிகள் கணிப்பு
ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை அடுத்த 50 ஆண்டுகளுக்குள் முழுமையாக மூடப்படும் என அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) என்ற ஆராய்ச்சி மையம், அடுத்த 50 ஆண்டுகளில் ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை மூடப்படும் என்று கணித்துள்ளது. "1980 காலகட்டங்களில் புவியின் அடுக்கு மண்டலங்களில் இருந்த கடுமையான வேதியியல் தாக்கங்கள் தற்போது பாதியாக குறைந்துள்ளது. இதன்மூலம், அடுத்த 50 ஆண்டுகளில் ஓசோன் படலத்தில் இருக்கும் ஓட்டை முழுமையாக மூடப்படும்" என தெரிவித்துள்ளனர்.
அதாவது, சூரியனின் மோசமான கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து பூமியை அன்டார்டிக் ஓசன் படலம் பாதுகாத்து வருகிறது. அதில், ஓட்டை ஏற்பட்டிருப்பதாக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வுகள் கண்டறிந்தன. இந்நிலையில், வரும் 2070ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த ஓட்டை மூடப்படும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
மேலும் படிக்க |அஸ்தமித்தது சுக்கிரன்: எந்த ராசிகளுக்கு பிரச்சனை? யாருக்கு ஆதாயம்? இதோ விவரம்
கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (CAMS) என்ற அமைப்பின் மூலம் ஓசோன் படலத்தின் ஓட்டை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஓசோன் ஓட்டையானது, பொதுவாக பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் இலையுதிர் காலத்தில்தான் விரியத் தொடங்குகிறது.
3D மாடலிங்கைப் பயன்படுத்தி, CAMS விஞ்ஞானிகள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து, ஓசோன் ஓட்டையின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். CAMS அமைப்பின் இயக்குனர் வின்சென்ட்-ஹென்றி பீச் கருத்துப்படி,"2022ஆம் ஆண்டு அண்டார்டிக் ஓசோன் படல ஓட்டை, ஆகஸ்ட் மாத இறுதியில் விரியத் தொடங்கியது. தற்போது கிடைத்த தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளாக அவற்றின் நிலை குறைந்துள்ளது" என்றார்.
ஓசோன் படலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வேதியியல் பொருள்களை, தயாரிக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என சர்வேதச நாடுகள் இணைந்து உடன்படிக்கை ஒன்றை 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டனர். இந்த உடன்படிக்கை 1989ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல்முறையாக சர்வதேச அளவில் ஒப்பந்தமான உடன்படிக்கை இதுதான்.
இந்த உடன்படிக்கை கையெழுத்தாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு, மனிதன் உருவாக்கிய வேதியியல் பொருள்களால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்தது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ