அல்சைமர் நோய்க்கும் மூக்கில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் இடையே உள்ள தொடர்பு
மூக்கில் உள்ள பாக்டீரியாக்கள் நாசியில் உள்ள நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழையக்கூடும்! விஞ்ஞானிகளின் ஆச்சரியமான கண்டுபிடிப்பு
மூக்கில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் அல்சைமர் நோய்க்கும் இடையில் தொடர்பு உள்ளது என்ற ஆச்சரியமான உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மூக்கில் உள்ள பாக்டீரியாக்கள் நாசி குழி நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழையக்கூடும் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர், இது அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் சங்கிலித்தொடரை கண்டறிய உதவும்.
வைரஸ் அல்லது பாக்டீரியல் நோய்த்தொற்றுகளால், அல்சைமர் நோய் ஏற்படுகிறது என்ற கருத்துக்கு இந்த ஆய்வு வலு சேர்க்கிறது.
மேலும் படிக்க | இதய நோயை குணப்படுத்தும் புற்றுநோய் சிகிச்சை! எப்படி தெரியுமா?
கிளமிடியா நிமோனியா என்பது ஒரு பரவலான பாக்டீரியா ஆகும், இது நிமோனியா மற்றும் பல்வேறு சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், இது அரிதான சந்தர்ப்பங்களில் இந்த பாக்டீரியா மூளையில் கண்டறியப்பட்டுள்ளது, இது மிகவும் தீங்கான சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Griffith பல்கலைக்கழகம் மற்றும் Queensland University of Technology ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், நிமோனியா எவ்வாறு மூளைக்குள் நுழைந்தது மற்றும் அது எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும், எவ்வளவு முறை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிய புதிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் இந்திய உணவுகள்
மூக்கில் வசிக்கும் பாக்டீரியா எவ்வாறு மூளைக்கு செல்கிறது என்பதை அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
சி. நிமோனியா ( C. pneumoniae) ஆல்ஃபாக்டரி மற்றும் ட்ரைஜீமினல் நரம்புகளையும் (olfactory and trigeminal nerves), பின்னர் ஆல்ஃபாக்டரி பல்ப் எனப்படும் வாசனையின் உணர்வு நரம்புகளையும் இந்த பாக்டீரியா 72 மணி நேரத்திற்குள் பாதிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அங்கிருந்து மூளையின் மற்ற பகுதிகளுக்கு விரைவில் பாக்டீரியா சென்றுவிடும்.
இந்த ஆராய்ச்சி எலிகள் மீது நடத்தப்பட்டது. இந்த பாக்டீரியா மத்திய நரம்பு மண்டலத்தில் நுழைந்த பிறகு, அல்சைமர் நோயுடன் தொடர்புடைய பல மாற்றங்களை ஏற்படுத்தியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும் படிக்க | காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR