செவ்வாய் கிரகத்தில் நிச்சயமாக ஒரு வளிமண்டலம் இருந்தாலும், அது மிகவும் மெல்லியதாக இருக்கிறது. பூமியின் வளிமண்டலத்தை விட 100 மடங்கு மெல்லியதான வளிமண்டலத்தைக் கொண்டது செவ்வாய் கிரகம். அதிலும், அங்குள்ள வாயுக்களில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக உள்ளது. எனவே செவ்வாய் கிரகத்திற்கு சென்றால், இயற்கையாக காற்றை சுவாசிக்க முயன்றால், விரைவில் மரணம் நேரிடும். பூமியின் அண்டை நாடாகவும், பூமிக்கு அப்பாற்பட்ட உயிரினங்களைத் தேடும் விஞ்ஞானிகளின் விருப்பமான கிரகமாகவும் செவ்வாய் கோள் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் கிரகம் தோராயமாக பூமியின் அளவு இருந்தாலும், அதில் இருக்கும் வளிமண்டலம் மெலிதாக இருப்பதாலும் மனிதன் சுவாசிக்க உயிர்காற்று குறைவாக இருக்கும் என்பது தற்போது பூமிக்கு மாற்றாக குடியிருக்க கிரகத்தை தேடும் மனிதர்களுக்கு சவாலாக உள்ளது. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருந்ததாம்!


மேலும் படிக்க | இதுவரை யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் பிரமாண்டமான காட்சி!


திரவ வடிவில் நீரைக் கொண்டிருந்த செவ்வாய் கிரகத்தில் உயிர்களும் இருந்திருக்கலாம் என விஞ்ஞானமும், அறிவியல் ஆய்வாளர்களில் பெரும்பாலோனோரும் நம்புகின்றனர்.  


ஆனால் சிவப்பு கிரகத்தில் Oxtgen ஐ உருவாக்கும் ஒன்று உள்ளது என நாசா விண்வெளிக்கு அனுப்பியுள்ள பெர்ஸெவரன்ஸ் ரோவரில் இணைக்கப்பட்ட பிரீஃப்கேஸ் அளவிலான இயந்திரம் சொல்லும் தரவுகள் அனுமானங்களை தருகின்றன. MOXIE (மார்ஸ் ஆக்சிஜன் இன்-சிட்டு வளப் பயன்பாடு (ISRU) பரிசோதனை) என்று அழைக்கப்படும் இந்த இயந்திரம் பல விஞ்ஞான உண்மைகளை நமக்கு வழங்குகிறது.


மேலும் படிக்க | நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் சீனா!


செவ்வாய் கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்துகிறதும் MOXIE, அதை கார்பன் மோனாக்சைடு மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கிறது. 2021 ஆம் ஆண்டில், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பெர்ஸெவரன்ஸ் ரோவர், இறங்கியபோது, ​​​​அதிலுள்ள MOXIE ஏழு முறை ஆக்ஸிஜனை உருவாக்கியது.


"வேறொரு கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி, அவற்றை வேதியியல் முறையில் மனிதப் பணிகளுக்குப் பயன்படும் ஒன்றாக மாற்றியமைப்பதற்கான முதல் நிரூபணம் இதுவாகும்" என்று முன்னாள் நாசா விண்வெளி வீரரும், எம்ஐடியின் MOXIE துணை முதன்மை ஆய்வாளருமான ஜெஃப்ரி ஹாஃப்மேன் தெரிவித்ததாக EurekaAlert பத்திரிகை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த HIP 65426இன் புதிய படங்களை வெளியிட்ட நாசா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ