800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டிசம்பரில் வானில் Christmas Star தெரியப் போகிறதா?
டிசம்பர் 21 அன்று மாலை, இந்த இரு கிரகங்களும் இரட்டை கிரகத்தைப் போல காட்சியளிக்கும். நிலவின் விட்டத்தில் 1/5 அளவிலான இடைவெளி மட்டுமே இவற்றிற்கு இடையில் இருக்கும்.
2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. இந்த வேளையில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அண்ட நிகழ்வு முதன் முறையாக காணக்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விண்வெளியிலும் விண்வெளி நோக்கங்களிலும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு அரிய வகை நிகழ்வு காத்திருக்கிறது. டிசம்பர் 21 ஆம் தேதி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, நமது சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய இரண்டு கிரகங்களான வியாழன் மற்றும் சனி இரட்டைக் கிரகமாகத் தோன்றும்.
இரண்டு கிரகங்களும் ஒன்றாகத் தோன்றி, "கிறிஸ்துமஸ் நட்சத்திரம்" (Christmas Star) அல்லது "பெத்லகேமின் நட்சத்திரம்" என்று அழைக்கப்படும் உருவாக்க வரிசையை ஏற்படுத்தும்.
சுமார் 800 ஆண்டுகளில் இந்த இரண்டு ராட்சத கிரகங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தோன்றுவது இதுவே முதன் முறையாகும்.
"இந்த இரண்டு கிரகங்களுக்கிடையில் சீரமைப்புகள் மிகவும் அரிதானவை. இது சுமார் 20 வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கின்றன. ஆனால் கிரகங்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக தோன்றும் இந்த நிகழ்வு மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும்.” என்று டெக்சாசில் உள்ள ஹூஸ்டனில் (Houston) உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியர் பேட்ரிக் ஹார்டிகன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
"இதற்கு முன்பு மார்ச் 4, 1226 அன்று விடியற்காலையில், இந்த இரு பெரிய கிரகங்களும் இவ்வளவு நெருக்கமாக வந்தன.” என்று அவர் கூறினார்.
கோடை முதல், இரு கிரகங்களும் (Planet) ஒன்றுக்கொன்று நெருங்கி வந்தாலும், டிசம்பர் 16-25 வரை இரண்டுக்கும் இடையில் ஒரு முழு நிலவின் விட்டத்திற்கு குறைவான அளவிலேயே இடைவெளி இருக்கும்.
"டிசம்பர் 21 அன்று மாலை, இந்த இரு கிரகங்களும் இரட்டை கிரகத்தைப் போல காட்சியளிக்கும். நிலவின் விட்டத்தில் 1/5 அளவிலான இடைவெளி மட்டுமே இவற்றிற்கு இடையில் இருக்கும்” என்று ஹார்டிகன் கூறினார்.
இந்த நிகழ்வு பூமத்திய ரேகைக்கு அருகில் மிக நன்றாகத் தெரியும். எனினும் உலகின் எந்த இடத்திலிருந்தும் இந்த நிகழ்வை காண முடியும்.
இது போன்ற அடுத்த நிகழ்வு, 2080 மார்ச் 15 அன்றுதான் காணப்படும் என்றும் ஹார்டிகன் தெரிவித்தார். அதன்பிறகு, இரு கிரகங்களும் 2400 ஆம் ஆண்டிற்குப் பிறகே இப்படிப்பட்ட நெருங்கிய நிலையில் தோன்றும்.
ALSO READ: நிலவில் கூடிய விரைவில் 4G Network: அசத்தும் NASA, Nokia ஜோடி!!
சில நேரங்களில் ‘கிரேட் கான்ஜங்க்ஷன்’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு சுமார் 19 முதல் 20 வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இருப்பினும், இந்த இரண்டு கிரகங்களும் 800 ஆண்டுகளாக பூமிக்கு இவ்வளவு அருகிலும், இவ்வளவு நெருக்கமாகவும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கத்திய நாடுகளில் உள்ள விண்வெளி ஆர்வலர்கள், டிசம்பர் 21 ஆம் தேதி சூரிய அஸ்தமனத்திற்கு 45 நிமிடங்களுக்குப் பிறகு தங்கள் டெலஸ்கோப்புகளை வானின் தென்மேற்கு திசையில் திருப்பி இந்த அற்புத நிகழ்வைக் காணலாம். உண்மையில் இந்த இரு கிரகங்களும் இவ்வளவு அருகில் வருவதில்லை. பூமியிலிருந்து (Earth) ஜூப்பிடர் 5au தொலைவிலும் சனி 10au தொலைவிலும் உள்ளன. ஆனால், இந்த அபூர்வ நிகழ்வு நடக்கும் வேளையில், இவை இரண்டும் முழு நிலவின் விட்டத்தை விட குறைவான இடைவெளியில் காணப்படும்.
ALSO READ: 3 தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட Nano Satellite-ஐ செலுத்தவுள்ளது NASA
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR