Neem vs Cancer: புற்றுநோயையும் போக்கும் வேப்பிலை! அதிசயத்தில் விஞ்ஞானிகள்
வேப்பிலையில் காணப்படும் மருத்துவ குணங்கள் புற்றுநோய்க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
Neem For Cancer Treatment: வேப்பிலையில் காணப்படும் மருத்துவ குணங்கள் புற்றுநோய்க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வேப்ப மரத்தில் உள்ள கூறுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் என்று ஒரு ஆராய்ச்சியின் போது கண்டறிந்துள்ளனர்.
வேம்பில் உள்ள அடிப்படைக் கூறுகள் புற்றுநோய்க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேப்பிலைக்கு ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது அனைவருகும் தெரியும். பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற வேப்பிலையை பயன்படுத்தி வருகிறோம்.
வேப்ப மரத்தில் உள்ள நிம்போலைடு எனப்படும் உயிரியக்கக் கூறு டி-செல் லிம்போமா (T-cell lymphoma)வுக்கு எதிரான இன்-விட்ரோ மற்றும் இன்-விவோ சிகிச்சைகள் இரண்டையும் கொண்டுள்ளது என்று இந்த ஆராய்ச்சி குழு கூறுகிறது.
மேலும் படிக்க | 3 எளிய யோகா பயிற்சி மூலம் கண் பார்வையை அதிகப்படுத்தலாம்!
இது ஹீமாட்டாலஜிக்கல் வீரியம் மிக்க நோய்களுக்கான சிகிச்சைக்கான சாத்தியமான புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சை மருந்தாக நிம்போலைடின் பயனை வலுவாக வலியுறுத்துகிறது.
வேப்பங்கொட்டையின் கூறுகள் புற்றுநோய்க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்
வேப்பங்கொட்டையின் ஆரோக்கிய நன்மைகளை கோடிட்டுக் காட்டும் இந்த ஆராய்ச்சியின் புதிய கண்டுபிடிப்புகள் மதிப்புமிக்க சர்வதேச இதழான 'சுற்றுச்சூழல் நச்சுயியல்' (Environmental Toxicology) இதழில் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் சிங் தெரிவித்தார்.
விஷால் குமார் குப்தா, ராஜன் குமார் திவாரி மற்றும் ஷிவ் கோவிந்த் ராவத் ஆகியோருடன் பல்கலைக்கழக மாணவர்களான பிரதீப் குமார் ஜெய்ஸ்வர் மற்றும் பிற சக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து செய்த இந்த ஆராய்ச்சிக்கு UGC ஸ்டார்ட்-அப் ஆராய்ச்சி மானியம் நிதியுதவி அளித்துள்ளது.
வேப்பங்கொட்டையின் கூறுகள் குறித்து ஆய்வுக் குழுவினர் கூறுகையில், வேம்பு ஒரு பாரம்பரிய மருத்துவ மரமாகும், இதன் பூக்கள் மற்றும் இலைகளில் ஒட்டுண்ணி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு போன்ற பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பண்புகள் காரணமாக, வேம்பு பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்தில், வேப்பிலை மற்றும் வேப்பம்பூக்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உயிரியக்க மூலப்பொருளான நிம்போலைடு (nimbolide), அதன் மருத்துவ மதிப்புகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய மூலக்கூறுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கட்டி எதிர்ப்பு செயல்திறன் கொண்ட நிம்போலைட், சில புற்றுநோய்களுக்கு எதிராக ஆற்றலுடன் செயல்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவும்.
முகநூலில் @ZEETamilNews , டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
ஆண்ட்ராய்டு இணைப்பு - https://bit.ly/3hDyh4G
ஆப்பிள் இணைப்பு - https://apple.co/3loQYeR