Gold from Water: அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
இனி தங்கத்தின் விலை அதல பாதாளத்திற்கு சென்றால் வியப்பில்லை... காரணம் தண்ணீரில் இருந்து தங்கம் கண்டுபிடித்துவிட்டால் தங்கத்தின் விலை குறையத்தானே வேண்டும்!!!
தண்ணீரை தங்கமாக மாற்ற முடியும் என்று சொன்னால், யாரும் இதுவரை நம்பியிருக்கமாட்டார்கள். ஆனால் இனிமேல் தாராளமாக நம்பலாம்.
நீரில் இருந்து பொன் தயாரிப்பது உண்மையில் சாத்தியமாகிவிட்டது. இது கற்பனையல்ல, உண்மை, அதிலும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, ஆராய்ந்து, பலவித சோதனைகளுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட உண்மை.
ப்ராக் நகரில் உள்ள செக் அகாடமி ஆஃப் சயின்சஸில் (Czech Academy of Sciences) இயற்பியல் வேதியியலாளர்கள் (Physical chemists) இந்த சாதனையை செய்துள்ளனர். அவர் தண்ணீரை ஒரு தனித்துவமான நுட்பத்துடன் தங்க உலோகமாக மாற்றினார்.
Also Read | லாக்டவுன் ஆகுமா தங்கத்தின் விலை?
தண்ணீரை உலோகமாக மாற்றியது எப்படி?
பொதுவாக ஒரு பொருளுக்கு மிக அதிக அழுத்தம் கொடுக்கும்போது அது உலோகமாக மாறும். அவற்றில் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மிக நெருக்கமாக இருப்பதால் அவற்றின் வெளிப்புற எலக்ட்ரான்கள் பகிரப்படுகின்றன, அவற்றின் மூலம் எலக்ட்ரோநெக்டிவிட்டி (electronegativity) நடத்த முடியும்.
தண்ணீரில் 15 மில்லியன் வளிமண்டல அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் (atmospheric pressure on water) இதைச் செய்யலாம், இது தற்போதைய ஆய்வக தொழில்நுட்பத்தில் சாத்தியமில்லை. புதிய ஆய்வின் இணை ஆசிரியர் பாவெல் ஜங்விர்த் (Pavel Jungwirth), இதற்கு மற்றொரு வழியைக் கண்டுபிடித்தார். அவர் எலக்ட்ரான் பகிர்வுக்கு கார உலோகங்களைப் (alkaline metals) பயன்படுத்தினார்.
Also Read | Gold Rate: சிரிக்க வைத்த தங்கம், ரூ.36,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை!!
இது போன்ற பரிசோதனை செய்யப்பட்டது தொடர்பாக நேச்சர் (Nature) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார உலோகங்கள் என்பது சோடியம்-பொட்டாசியம் போன்ற எதிர்வினை கூறுகளின் குழுவாகும். இவற்றில் சோதனை செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது, ஏனென்றால், இவை தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது, பயங்கர வெடிபொருட்களாக மாறும்.
எனவே, சிறப்பு ஏற்பாடுகல் செய்யப்பட்டு மிகவும் கவனமாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதனால் உலோகங்கள் வெடிக்காது. அவை சாதாரண அறையின் வெப்பநிலையில் திரவமாக இருக்கும்.
Also Read | Gold Desire: நிறைய தங்கம் வாங்கி சேர்க்க ஆசையா? இது பெண்களுக்கான பொன் விரதம்
பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவை சிரஞ்சுகளில் (syringes) நிரப்பப்பட்டு ஒரு அறையின் வெற்றிடத்தில் வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, இந்த கலவையின் சொட்டுகள் சிரிஞ்ச்களிலிருந்து அகற்றப்பட்டன, அதில் ஒரு சிறிய அளவு நீராவி செலுத்தப்பட்டது. உடனே அவற்றில் உள்ள நீர் சில நொடிகளில் உறைந்துவிட்டது.
எதிர்பார்த்தபடி, கலவையின் நீர்த்துளிகள் எலக்ட்ரான்களை தண்ணீருக்குள் கொண்டு சென்றன. தண்ணீர் சில நொடிகள் தங்கமாக மாறியது. இந்த ஆச்சரியமான பரிசோதனையால் உலகையே அதிர வைத்திருக்கிறது.
தனித்துவமான தொழில்நுட்பத்துடன் இந்த ஆராய்ச்சி நிறைவடைந்தது. இந்த தொழில்நுட்பத்தின் படி தங்கம் தயாரிக்கத் தொடங்கினால், தங்கத்தின் விலை தண்ணீரின் அளவுக்கு குறையும். ஆனால், நீரின் விலை விண்ணைத் தொடுமோ?
Also Read | பொன்னகைகளின் பொன்னான புகைப்படத் தொகுப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR