Virovore: கொரோனாவுக்கே டஃப் ஃபைட் கொடுத்து அழிக்க வந்த உயிரினம்!
Research On Virus Virovore: வைரஸ்களை பார்த்து கவலைப்படும் காலம் மலையேறப் போகிறது! வைரஸை ருசித்து சாப்பிடும் உயிரினத்தை அதிகரித்தால் என்ன? சிந்திக்க வைக்கும் ஆராய்ச்சி...
Virovore: வைரஸ்களை உண்ணும் உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், நுண்ணுயிரிகள் தீவிரமாக வைரஸ்களை உண்ணுகின்றனவா என்பதையும், அது சமூகத்தின் உடலியல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. "விரோவோர்" அல்லது வைரஸ்களை உண்ணும் உயிரினம் தொடர்பான ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்துள்ளது. முதன்முதலில் இந்த உயிரினம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஹால்டீரியா மற்றும் பாராமீசியம் என்ற இரண்டு பிளாங்க்டன் உயிரினங்கள் (Virovore) வைரஸ்களை உணவாக உண்பதையும், அதனால் அவை புஷ்டியாக செழித்து வளர்வதையும் கண்டறிந்தனர்.
இது, வைரஸ்களை பார்த்து கவலைப்படும் காலம் மலையேறப் போகிறது என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. வைரஸை ருசித்து சாப்பிடும் உயிரினத்தை அதிகரித்தால் என்ன? என்று அடுத்தக் கட்டத்திற்கு செல்ல சிந்திக்க வைக்கும் ஆராய்ச்சியாக இது இருப்பதால், எதிர்காலத்தில், கொரோனா போன்ற வைரஸ்களின் அபாயம் குறையலாம்.
ஆய்வறிக்கை
இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கை, PNAS இதழில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இயல்பாகவே வைரஸ்களை உட்கொள்ளும் பல உயிரினங்கள் உள்ளன, அவை உணவுச் சங்கிலியில் கணக்கிடப்பட வேண்டும் என்றால், வைரஸ்களை உண்பதால், கணிசமான அளவு ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் பெற வேண்டும். அந்த உயிரினங்களை வைரோரி என அழைக்கின்றனர்.
மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், நுண்ணுயிரிகள் தீவிரமாக வைரஸ்களை உண்ணுகின்றனவா என்பதையும், அது சமூகத்தின் உடலியல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் படிக்க | 7 நாட்களில் கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் அதிகரிப்பு! பீதி ஏற்படுத்தும் கோவிட்
ஹால்டீரியா என்ற நுண்ணுயிரி, நன்னீர் நீரில் வாழும் ஒரு நுண்ணிய சிலியேட் ஆகும். அவை, நியூக்ளிக் அமிலங்கள், நிறைய நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் என மிகவும் நல்ல பொருட்களால் ஆனவை ஆகும். நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியல் நிபுணர் ஜான் டெலாங், தனது குழுவுடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார்.
எங்கும் நிறைந்த வைரஸ்
“இந்த உயிரினங்கள் வைரஸ்களை சாப்பிடுவதால், நல்ல மூலப்பொருட்களை எப்படி சாப்பிடுவது என்று நிச்சயமாக ஏதாவது கற்றுக்கொண்டிருக்கும். முன்பே குறிப்பிட்டது போல, வைரஸ்கள் எங்கும் நிறைந்திருப்பதால், அவை தற்செயலாக எல்லா நேரங்களிலும் உண்ணப்படுகின்றன, இருப்பினும், இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் நன்னீர் ஆல்காவுடன் பரவலாக இருக்கும் ‘குளோரோவைரஸை’ தேர்வு செய்தனர்.
மேலும் படிக்க | EPFO முக்கிய தகவல்: இதை செய்யாவிட்டால் பெரிய இழப்பீடு செலுத்தவேண்டும்!!
கூடுதலாக, ஹால்டீரியா மற்றும் பாராமீசியம் ஆகியவற்றுக்கு இடையேயான உணவு நுகர்வு தொடர்பான வெவ்வேறு வடிவங்களையும் ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. ஹால்டீரியா உயிரினம், குளோரோவைரஸை ஊட்டச்சத்துக்கான ஆதாரமாகப் பயன்படுத்தியது. அதுவே, பாராமீசியம், வைரஸ்களை உட்கொண்டபோது அது அதிகம் வளரவில்லை.
கூடுதலாக, குளோரோவைரஸின் நுகர்வு கார்பன் சுழற்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது, “எத்தனை வைரஸ்கள் உள்ளன, எத்தனை சிலியேட்டுகள் உள்ளன மற்றும் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை ஆராய்ந்தால், அது பெரிய அளவில் இருக்கிறது. உணவுச் சங்கிலியில் ஆற்றல் இயக்கம்" என்று ஆராய்ச்சியாளர் ஜான் டெலாங் கூறுகிறார்.
மேலும், "இது நாம் நினைக்கும் அளவில் நடந்தால், அது உலகளாவிய கார்பன் உமிழ்வு தொடர்பான நமது பார்வையை முற்றிலும் மாற்றிவிடும்" என்ற ஜான் டெலாங்கின் கருத்து, இந்த ஆராய்ச்சியை அதி முக்கியமானதாக மாற்றுகிறது.
மேலும் படிக்க | கோமாவுக்கு காரணமான கொசு இது! ச்சூ... கொசுத்தொல்லை தாங்க முடியலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ