கோமாவுக்கு காரணமான கொசு இது! ச்சூ... கொசுத்தொல்லை தாங்க முடியலை!

Dangerous Mosquito Bite: கொசுக்கடியை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கும் செய்தி இது. கொசுக்கடியால் பாதிக்கப்பட்டவருக்கு 30 அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது என்பது அதிர்ச்சியளிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2022, 06:32 AM IST
  • கொசுக்கடியால் இவ்வளவு பிரச்சனையா?
  • 30 ஆபரேஷன் செய்ய வைத்த கொசுக்கடி
  • மூளைக்காய்ச்சல் ஏற்படுத்தும் கொசு
கோமாவுக்கு காரணமான கொசு இது! ச்சூ... கொசுத்தொல்லை தாங்க முடியலை! title=

கொசுக்கடியை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கும் செய்தி இது. கொசுக்கடியால் பாதிக்கப்பட்டவருக்கு 30 அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது என்பது அதிர்ச்சியளிக்கிறது. கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம் என்பது தெரியுமா? 2018ம் ஆண்டில் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் இறந்து போக கொசுக்கள் காரணமாக இருந்தன என்பது புள்ளிவிவரங்கள் சொல்லும் நிதர்சனமான உண்மை. அதே ஆண்டில், மனிதர்களின் இறப்புக்கு காரணமான உயிரினங்கள் பட்டியலில் கொசுக்களுக்கு இரண்டாம் இடம் உள்ளது என்பது கொசுக்கடியின் தீவிரத்தை உணர வைப்பதாக இருக்கிறது. 

கொசுக் கடித்த ஒருவர் மனிதன் கடுமையான கோமா நிலைக்குச் சென்று 30 அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு பிழைத்தார் என்பது அதிர்ச்சி தரும் வினோத செய்தி ஆகும். ஜெர்மனியின் ரோடர்மார்க்கைச் சேர்ந்த 27 வயது இளைஞரை கடித்த கொசு மிகவும் மோசமான கொசு. இது கொசுவில் ஆசிய புலி வகை கொசு (Asian Tiger Mosquito) வகையைச் சேர்ந்தது.

மேலும் படிக்க | கொசுவுக்கு உங்களை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா? அட ‘இது’ தான் காரணமா?

இந்தக் கொசு கடித்த அவர் நினைவிழந்து, கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு 30 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. 2021 கோடைக் காலத்தில் Asian Tiger Mosquito என்ற வகை கொசுவிடம் கடி வாங்கிய இளைஞருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. முதலில் காய்ச்சல் போன்ற அறிகுறி ஏற்பட்டது, காய்ச்சல் கடுமையானதால், அவரது கால்விரல்களில் இரண்டு துண்டிக்கப்பட்டது.

அதனுடன் பிரச்சனை தீரவில்லை. அவருக்கு 30 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் கோமாவில் இருந்த அந்த இளைஞரின் ரத்தத்தில் விஷம் கலந்ததால், கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் என உடலின் பல பாகங்களிலும் பலமுறை செயலிழப்பு ஏற்பட்டது.  

அவரது தொடை பகுதியில் ஒரு சீழ் உருவானது, அதை அகற்ற வேண்டியிருந்தது, இதனால் தோல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியிருந்தது. வீரியம் மிக்க பாக்டீரியாக்கள், அவரது இடது தொடையின் பாதி வரை அழித்துவிட்டன. இதனால் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டதாக திசு சோதனைகள் தெரிவித்தன.

மேலும் படிக்க | இந்த வைட்டமின் குறைபாட்டால் முடி உதிர்வு கட்டாயம் ஏற்படும்

ஆசிய புலி கொசு
ஆசிய புலிக் கொசு இனம் மிகவும் தீவிரமான விஷத்தன்மைக் கொண்டது. அதன் அறிவியல் பெயர், ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes Albopictus), காட்டுக் கொசு என்றும் இது அழைக்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த குறிப்பிட்ட வகை கொசுக்கள் ஆசிய நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இது ஏன் மிகவும் கொடியது?
இந்த குறிப்பிட்ட கொசு இனமானது, சிக்குன்குனியா காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் வைரஸ், ஜிகா வைரஸ் மற்றும் டைரோபிலேரியா இம்மிடிஸ் போன்ற பல வைரஸ் நோய்க்கிருமிகளை தோற்றுவிக்கிறது. இந்தக் கொசு, டெங்கு காய்ச்சலைக் கடத்தக்கூடியது, மேலும் மூளைக்காய்ச்சல் மற்றும் நாய் நெஞ்சுப் புழு (dog heartworm) என்ற புழுவைத் தூண்டும் சாத்தியங்களையும் ஏற்படுத்துகிறது. மற்ற கொசுக்களை விட இரண்டு மடங்கு ஆபத்தான இந்த கொசு கடித்தால், உயிர் பிழைப்பது அரிது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க | Weight Loss Vegetable: உடல் எடையைக் குறைக்கும் கருணைக் கிழங்கு

இந்த கொசு கடித்தால், கடுமையான டெங்கு, திரவக் குவிப்பு, சுவாசக் கோளாறு, கடுமையான இரத்தப்போக்கு என பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே கொசுக்கடியில் இருந்து தப்பிக்க எச்சரிக்கையாக இருக்கவும். கொசு தானே என்று அலட்சியமாக இருக்கவேண்டாம்.

ஏனெனில் கொசு குறுகிய காலம் உயிர் வாழ்ந்தாலும் தனது இனத்தை துரிதமாக விரிவாக்கிவிடுகிறது. ஒரு கொசு ஒரு நேரத்தில் சுமார் நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது.

கொசுத்தொல்லை என்றும் தீராமல் தொடர்வதற்கான காரணம் இதுதான். ஆனால், ஆண் கொசுக்கள் ஏறக்குறைய ஒரு வாரமே வாழ்கின்றன. பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதமே உயிருடன் இருக்கும். அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிடுகிறது.

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு ஹாய் சொல்லும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News